ஒரு மனித உயிர் இந்த மண்ணில் பிரவேசிப்பது என்பது பொது விதி என்றாலும் எல்லா உயிர்களும்
ஒரே மாதிரி மண்ணைத் தொடுவதில்லை.ஆகையினால் "'மண்ணின் மைந்தர்கள் "என்றால் தீப்பந்த வெளிச்சத்தில்
கோரைப்பாய் மீது படுத்துக்கொண்டு "தக்க தசமதில் தாயோடுதான்படும் துக்க சாகர துயரிலிருந்து வெளிவந்து இந்த
மண்ணைத்தோடும் மகத்தானப் பேறு பெற்றவர்கள் மட்டுமே மண்ணின்
மைந்தர்கள் என்ற அடைமொழிக்கு உரியவர்களாவார்கள்.
அப்படிப்பட்ட மண்ணின் மைந்தரான கர்னல் கணேசன் தனது பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக
சன்னாநல்லூரில் 30-11-2019 அன்று ஒரு நூல் வெளியிட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து ஒரு மாதத்திற்கு முன்பே
எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
கர்னல் கணேசனுக்கு மிகவும் நெருக்கமான நண்பரான Brigadier M.Sudanthiram,V S M.அவர்கள்
கட்டாயம் வருவதாகவும் பெங்களூரிலிருந்து வானூர்த்தியில் திருச்சி வந்து இரவு அங்கேயே தங்கிவிட்டு 30 ந்தேதி
காலையில் வாடகைக்காரில் சன்னாநல்லூர் வந்து விழாவை நடத்த்திவிட்டு மாலைக்குள் திருச்சி சென்று
வானூர்தியில் பெங்களூர் போய்விடுவதாகத் திட்டமிட்டார்.
எனது எழுத்துக்களை வெளியுலகத்திற்கு அறிமுகப் படுத்திய நண்பர் ,எழுத்தாளர்,பதிப்பாளர்
திரு வையவன் அவர்களும் கட்டாயம் வருவதாக வாக்களித்திருந்தார்.அவர் சென்னையிலிருந்து காரில் வரவேண்டும்.
வானிலை பயமுறித்துக் கொண்டிருந்தாலும் நவம்பர் 27 நானும் துணைவியும் சன்னாநல்லூர் சென்றடைந்தோம்.
வானிலை நவம்பர் 30 திருவாரூர் மாவட்டத்தில் மழை கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.
இவைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கணேசன் விழா ஏற்பாட்டில் தீவிரமானார்.நன்னிலம் காவல் துறை
அதிகாரிகளை சந்தித்து வாகன கட்டுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தார். சுமார் 50 பேர் வரலாம் என்று எதிர்பார்த்து பகலுணவுக்கு ஏற்பாடு செய்தார்.
29 நவம்பர் அன்று மாலையே பங்களூரிருந்தும் கிருஷ்ணகிரியிலிருந்தும் நண்பர்கள் வந்து விட்டார்கள்.இரவு தங்க விடுதியில் ஏற்பாடு செய்தார்.
எப்பொழுதும் கணேசனுக்கு உதவியாக இருக்கும் அவரது மைத்துனர் உடல்நலக் குறைவால் வரவில்லை.
நவம்பர் 30 பொழுதுபுலர்ந்தது.இரவு முழுவதும் பெய்த கடும் மழையால் விழாவுக்கு ஏற்பாடு செய்த இடத்தில் ஒரு அடி மழை நீர் நின்றது.உணவுக்கு ஏற்பாடு செய்த இடம் எந்த
பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருந்தது.உடனடியாக விழா ஏற்பாட்டை அந்த இடத்திற்கு மாற்றவும் விழா முடிவில் அங்கேயே உணவுக்கும் மாற்றினார்.
30 ந்தேதி காலையில் பெங்களூரிலிருந்தும் தஞ்சாவூரிலிருந்தும் பாண்டிச்சேரியிலிருந்தும்,காரைக்காலிலிருந்தும் நண்பர்கள் வருவதாக ஏற்பாடு.
அண்டார்க்டிக்காவில் கணேசனுடன் பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரியும் ஒரு கடற்படை அதிகாரியும் வருவதாக ஏற்பாடு.
சென்னையிலிருந்து தனி காரில் முதல்நாள் இரவே வந்துவிட்ட திரு வையவன் விடுதியில் இருந்தார்.
விடாது மழை பெய்தாலும் இயற்கைக்காட்டிய இரக்கத்தால் அவ்வப்பொழுது சற்று இடைவெளியிருந்தது.கூட்டம் கூட ஆரம்பித்தது.
கணேசனே விழா நடத்துபவர்,ஒருங்கிணைப்பாளர்,வரவேற்புரை செய்பவர்,விருந்தினர்களை அறிமுகப்படுத்துபவர்.
விழா இனிதே ஆரம்பமானது.
விழாவின் நிறைவாக திருமதி அனந்தலக்ஷிமி நன்றி கூற விருந்தினர்கள் பகல் விருந்துக்கு கலைந்தனர்.
சில முக்கிய விருந்தினர்கள் ;
Brig. M.Sudanthiram,VSM.
Commodore.B.Ravinder
Mr.Vaiyavan.
Dr.Sambandamoorthy.
Dr.S.Amutha.
Mr.Vedachalam &15 from Karaikkaal.
Maj vijayakumar.
H/Capt Rajan,Santharaj & 20 Ex servicemen.
Chief Petty offr K.Rajkumar
B.Ramanathan
Maj.Ganesan.
20 From Sembiyanalloor.
15 From Sannanallur.
மொத்தத்தில் சுமார் 120 பேர்கள் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர். காவல் துறைக்கு நன்றி.
மழையையும் பொருட்படுத்தாமல் கர்னல் கணேசனுக்கு மரியாதை கொடுத்து சிரமங்களை ஏற்று விழாவை சிறப்பித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
விழாவுக்கு உறுதுணையாய் இருந்த நன்னிலம் ரோட்டரி நண்பர்களுக்கு நன்றி.
வணக்கம்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968