விடுமுறையிலிருந்து திரும்பியிருந்த கணேசனுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை.
பிரெய்லி ரயில்வே சந்திப்பில் இரவு 2-3 மணியளவில் தன்னந்தனியாக நின்றுகொண்டிருக்கிறார்.
ஏராளமான சிவில் லாரிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அவை இராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு யாரிடம் ஒப்படைப்பது என்று இங்கும் அங்குமாகத்தேடுக்கிறார்கள்.
அந்நிலையில் "சவாலிஸ் கம்பெனி கிதர் ஹை.....கிதர் ஹை "என்று கணேசனிடம் கேட்டார்கள். சோர்வு, வருத்தம், தூக்க கலக்கம் என்று நின்றுகொண்டிருந்த கணேசன், இங்கில்லையப்பா என்று சொல்லிவிட்டார்.
உடனே அவரது உதவி ஆள், சார், சவாலிஸ் என்றால் 44. அது நம்ம கம்பெனி சார். அவை நமது சாமான்கள் என்கிறார்.
இப்படி இரவு பகல் பாராது இரெண்டு மூன்று நாட்களில் குவிந்த ஏராளமான சாமான்களுடன் கணேசன் பஞ்சாப் மாநிலம் கபூர்தலா என்ற இடம் வந்து சேர்ந்தார்.
பஞ்சாப் மாநிலம்முழுவதும் இராணுவ அமைப்புகள் அங்கும் இங்குமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். சுமார் 2000 டன் பாதுகாப்புக்கும், பதுங்குக்குழிகள் அமைப்பதற்குமான சாமான்கள் கபூர்தலா ரயில்வே ஸ்டேஷன் முழுவதும்பரவிக்கிடந்தன.
இந்நிலையில் ராஜஸ்தான் எல்லை கட்ச் பகுதியில் நடந்த ஆக்கிரமிப்பு முறியடிக்கப்பட்டு போர் தவிர்க்கப்பட்டது என்ற செய்தி பரவியது.
இங்கே கபூர்தலாவில் மேலும் மேலும் இராணுவப்போர்தளவாடங்கள் வந்து குவிந்துகொண்டிருந்தன.
ஜூலை முதல் வாரத்தில் போர் இல்லை என்று முடிவாகி இராணுவ அமைப்புகள் எல்லைப்புறத்திலிருந்து பின்னால் நகர ஆரம்பித்துவிட்டன. கணேசனது படைப்பிரிவு பெறலிக்குத் திரும்ப உத்திர விடப்பட்டது.
அவர்கள் திரும்புவழிப்பயணம் தொடங்கிய அன்று பஞ்சாப் முழுவதும் "ஆந்தி" என்று சொல்லப்படும் மண சூறாவளி(மணற்புயல்) வீச ஆரம்பித்துவிட்டது.
எல்லோரும் புறப்பட தயாராகிக்கொண்டிருந்த நிலையில் கணேசனும் உடன் சில ஜவான்களும் அங்கேயே தங்கி கபூர்தலா வந்துள்ள சுமார் 1000 டன் போர்தளவாடங்களை ஜலந்தர் எஞ்சினியர் பார்க்கில் ஒப்படைத்துவிட்டு வருமாறு உத்திரவிடப்பட்டார்.
அந்த மணற்புயலுக்கிடையிலே மீண்டும் கணேசன் தனியனாக....
சுமார் 1000 காலாட்படை வீரர்கள் உதவி கிடைத்தது. பத்து-பதினைந்து நாட்களில் வேலையை முடித்துவிட்டு, லூதியானா, அம்பாலா சாஹரான்பூர் மொராதாபாத் வழியாக 1965 ஆகஸ்ட் 5 அன்று கணேசன் பிரெய்லி வந்து சேர்ந்தார்.
போர்க்கள ஆயத்தங்கள் முடிந்துவிட்டது என்று சொல்லமுடியாதநிலையில் இராணுவ அமைப்புகள் இருந்தன. ஆனால் அதே ஆகஸ்ட் 5 ந்தேதி ஜம்மு காஷ்மீரில் பிடிபட்ட சில பாகிஸ்தானியர்கள்
அந்த நாட்டின் பயங்கரமான திட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதன்காரணமாக இராணுவ அமைப்புகள் எல்லைப்புறத்திற்கு அருகில் இருக்கவேண்டும் என உத்திரவு இடப்பட்டது.
கணேசனது படைப்பிரிவினர் மீண்டும் புறப்பட்டு ஆகஸ்ட் 28 ந்தேதி அம்பாலா வந்து சேர்ந்தனர். சுமார் 1000 க்கும் அதிகமான சிவில் லாரிகளில் இராணுவதளவாடங்கள் இருந்தன. சாமான்களை இறக்காமல் அடுத்த உத்திராவுக்காக காத்திருந்தார்கள்.
இந்நிலையில் 01 செப்டம்பர் 1965 பாகிஸ்தான் பயங்கரமான போரை ஆரம்பித்தது.
கணேசன் படைப்பிரிவினர் உடனடியாக பதான்கோட் செல்ல உத்திரவு வந்தது
டோசர், மோட்டார் கிரேடர் போன்ற மெஷின்கள் மற்ற வண்டிகளின் வேகத்திர்க்கு ஈடுகொடுத்துப் போகமுடியாது என்பதால் அவைகளை ரயில் மூலமாக பதான்கோட் அனுப்ப முடிவானது.
கணேசன் அம்பாலாவில் இருந்து அந்த மெஷின்களை ரயிலில் அனுப்பிய பிறகு வரும்படி சொல்லிவிட்டு அவரது படைப்பிரிவினர் புறப்பட்டார்கள்.
போர் ...போர் .....போர் ....!
தன்னந்தனியனாக கணேசன்.......
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968