Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வியாழன், 25 ஏப்ரல், 2013

அறிவார்ந்த அணுகுமுறை

ஓரளவு நகைச்சுவைத் திறன், மற்றும் காரியங்களுடன் கூடிய

கண்டிப்பு போன்ற குணங்கள்தான் ஒருவர்

மீதான நம்பிக்கையைக் கொடுக்கும்.

இரக்கமற்ற கொடுந்தாக்குதல் பண்புகளோ, கடுமையான அடக்குமுறைப் பண்புகளோ நிலைத்த வெற்றியைத் தருவதில்லை. தன்னடக்கத்துடன் கூடியதும், வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான மனப்போக்கு, ஓரளவு நகைச்சுவைத் திறன், மற்றும் காரண காரியங்களுடன் கூடிய கண்டிப்பு போன்ற குணங்கள்தான் ஒருவர்மீதான நம்பிக்கையைக் கொடுக்கும்.

இங்குதான் அதிகாரிகளுக்கும் அதிகாரிகள் அல்லாதோருக்குமான பாசப்பிணைப்பு, கடமையுணர்வு என்ற செஞ்சாந்து போட்டுக் ஒட்டப்படுறது. இப்படி ஒட்டப்படும் பிணைப்புகள் பணிக் காலத்திற்குப் பின்னும் உயிருள்ளவரை பிரிவதில்லை. எத்தனையோ ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஓய்வு பெறாத அதிகாரிகள் அல்லாதோர் இன்னமும் நட்புக் கலந்த மரியாதையோடு கண்டு பேசி மகிழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட அறிவார்ந்த நட்பை உருவாக்குங்கள்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968