` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 10 ஜனவரி, 2018

காலத்தால் அழியாத கல்வெட்டு

கணேசன் 1961 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள் தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறையில் மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்தார். பட்டுக்கோட்டை யில் பணியில் சேர்ந்த அவர் பின்னர் ஆவுடையார்கோவில், பேரளம், கொரடாச்சேரி போன்ற ஊர்களில் பணியாற்றிவிட்டு 1962 ம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகில் மெலட்டூர் என்ற இடத்தில் கட்டப்படவிருந்த Conversion of an Anaicut into a Regulator என்ற வேலைக்கு மாற்றப்பட்டு மெலட்டூர் வந்து சேர்ந்தார்.
வெட்டாற்றின் குறுக்கே இது கட்டப்படவிருந்தது.விவசாயம் முடியும் தருவாயில் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நீர்வரத்து நிறுத்தப்பட்டு ஏப்ரல் -மே மாதங்களில் வேலை முடிந்து நீர் திறந்துவிட வேண்டும்.
ஆற்றின் கரையிலிருந்த ஆய்வு மாளிகை கணேசனது தங்குமிடமாக மாற்றப்பட்டு வேலை ஆரம்பமானது.
அன்றைய தஞ்சாவூர் காங்கிரஸ் பிரசிடெண்ட் தான் ஒப்பந்தக்காரர். எந்தவித பிரச்சினையுமில்லாமல் வேலை நடந்து முடிந்தது.

செலவிடப்படாத சுமார் 2000 மூட்டை சிமெண்ட்டை ஒப்பந்தக்காரர் எடுத்துக்கொண்டு போய்விட்டார். இதை எதிர்த்த எனக்கு அது காண்ட்ராக்ட் வேலை என்பதால் கணக்குப்படியான சிமெண்ட் அவருக்கு தரவேண்டியதுதான் என்கிறார்கள்.
மிகவும் உன்னிப்பான கவனத்தினால் ஏற்பட்ட மீதமான சிமெண்ட் டிபார்ட்மெண்ட்க்குத்தான் சொந்தம் என்ற எனது வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மனம் வெறுப்படைந்த கணேசன் தண்ணீர் திறக்கும் நாளன்று நூறு இரண்டு ரூபாய் நோட்டுகளை ஆற்றில் வீசிவிட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

தஞ்சை நண்பர் தங்கமுத்து அவர்களுடன் ராஜினாமாவை ஏற்காத அவர் உயர் அதிகாரி 1962 அக்ட்டோபர் - நவம்பரில் நடந்த சீன -இந்தியப்ப் போரையும் அதனால் ஏற்பட்ட அவசரகால நிலையையும் நினைவுபடுத்தி கணேசனை இராணுவத்திற்கு விண்ணப்பிக்கத் தூண்டினார்.
அதுவே கணேசன் வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது.இராணுவத்தேர்வுகள் கடுமையாக இருந்தாலும் அவர் தேர்வு பெற்று 1963 ம் ஆண்டு அக்டொபர் 9 ந்தேதி இராணுவப் பயிற்சியில் சேர்ந்து 1964 ம் ஆண்டு மே மாதம் 3 ம் நாள் பெருமைமிகு இந்திய இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார்.
இராணுவ வாழ்வில் இடை இடையே விடுமுறையில் வரும்போது தவறாமல் மெலட்டூர் சென்று தான் கட்டிய ரெகுலேட்டர் எப்படி இருக்கிறது என்று பார்த்து வருவார்.
இன்று 2018 ம் ஆண்டு,55 ஆண்டுகள் ஆன அவரது வேலை காலத்தைக்கடந்த கல்வெட்டாக நின்றுகொண்டிருக்கிறது.
இதோ ! அது உங்களுக்காக. !

இராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றி இந்தியாவின் அண்டார்க்டிக்கா ஆய்வு தள தலைவராகப் பணியாற்றி,குடியரசு தலைவரின் விருது பெற்று கணேசன் 1994 ம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

குடியரசு தலைவர் விருது "வஷிஷ்ட்ட சேவா மெடல் "வழங்கப்படுதல்.

26 ஜனவரி 1994.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968