மெய்ப்பொருள் அறிவு என்பது ஒருவித மன நிலை.இந்நிலையை அடைந்தவர்கள்
பின்னர் அந்நிலை பற்றி முழுவிளக்கமும் தந்தது இல்லை.காரணம் சொற்களால் விளக்க முடியாத நிலை அது.
உணர்ந்துதான் பார்க்கவேண்டும்.
ராமகிருஷ்ண பரம ஹம்சர் பரவச நிலைக்குப் போகிறார் என்பார்கள்.மற்றவர்களும் அந்நிலைக்குப்
போக முயற்சிக்கலாம்.ஆனால் ராமகிருஷ்ணரின் மன நிலையையும் மற்றவர்களது மன நிலையும் ஒன்றே என்று சொல்லமுடியுமா ?
எண்ணங்களின் வலிமையான தாக்கத்தினால் சூழ்நிலையை மாற்றி அமைக்க முடியும் என்றும் கற்பனையில் காணும் மனிதர்களை நேரில்
கொண்டுவந்து நிறுத்த முடியம் என்றும் கர்னல் கணேசன் எழுதியும் பேசியும் வருகிறார்.அதன் வெளிப்பாடாக அவர் பிறந்த ஊரான
சன்னாநல்லூரில் அறிவை அறிவால் அறிந்துகொள்ளும் அறிவுத் திருக்கோவில் அமைத்து பொது மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறார்.
மயிலாடுதுறை -திருவாரூர் மெயின் சாலையில் அவரது சொந்த நிலத்தில் அமைந்துள்ள இந்த இடத்தைப்பற்றி யாரிடமும் விளக்கம் கேட்கவேண்டிய அவசியமில்லை.இதைப்பற்றி கேள்விப்பட்டு அதைப்பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டால் கட்டாயம் ஒருநாள் அங்குபோய் நிற்பீர்கள். திருவாரூர் தியகேசப் பெருமானைத் தரிசிக்க ஒருவர் பாண்டிச்சேரியிலிருந்து காரில் புறப்பட்டுப் போகிறார்.வழியில் அகத்தூண்டுதல் பூங்காவைப்பார்த்துவிட்டு இது என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே போகிறார்.
தியாகேசப் பெருமானை தரிசித்துவிட்டு வரும் வழியில் மீண்டும் சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவில் காரை நிறுத்தி
சுவர்களில் எழுதியிருக்கும் வாசகங்களை பொறுமையாகப் படிக்கிறார்.பூங்கா பூட்டி யிருக்கிறது .யாருமே எதிர்பார்க்காமல் சற்று நேரத்தில்
பூங்கா பாதுகாவலர் அங்கு வருகிறார். பூங்காவைத்திறந்து அவர்களை வரவேற்று பூங்கா அம்மைப்பின் காரண காரியங்களை விளக்குகிறார்.
விண் ஈர்ப்பு மையம் என்ற நூலக அருங்காட்சியகத்தை திறந்து மேலும் விளக்குகிறார்.
தியாகேசனத்தரிசித்து விட்டு வந்த நமது பார்வையாளர் ஒரு புது உலகிற்குள் நுழைந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு பூங்கா அமைப்பாளர்
கர்னல் கணேசனுடன் பேச முடியுமா ? என்று கேட்கிறார். நேரம் பகல் 2 மணி.சென்னையிலிருக்கும் கணேசனைத் தொடர்பு கொள்கிறார்கள்.
வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வித்தியாசமான புதுமையை படைக்கும் மனிதருடன் பேசிய அவர் தனது உணர்வுபூரணமான மகிழ்ச்சிய
வார்த்தைகளில் கொட்டுகிறார். அவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா ?
அவர் ஒரு மக்கள் பிரதிநிதி.அதுவும் பக்கத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்.
ஆம் !நண்பர்களே !என்னுடைய பிறந்த மண்ணை உலகின் கீழ்க்கோடியில் தூவி அங்கிருந்து கோடிக்கணக்கான
ஆண்டுகள் உறைபனி யில் மூழ்கிக் கிடந்த சுமார் ஒரு டன் எடையுள்ள கற்பாறைகளை பதினைந்தாயிரம் கீ.மீ
மற்றும் ஏழுகடல் தாண்டி கொண்டுவந்து உறங்கிக் கிடக்கும் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்ப முயற்சிக்கும்
கணேசனை அண்டை மாநில மக்கள் பிரதி நிதி சட்டமன்ற உறுப்பினர் வானளாவாப் புகழ் கிறார்.
எனது தாயகம் 234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழகத்தில் எனது பிறந்த ஊரினைகொண்ட
சட்ட மன்ற உறுப்பினர் மந்திரியாக இருக்கும் இந்த தமிழ்நாட்டில் இந்த சுமார் பத்து ஆண்டுகளில்
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சாலையில் அமைந்திருக்கும் அகத்தூண்டுதல் பூங்காவைப்
பற்றியோ தன்னலமற்ற தியாக உணர்வுடன் பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி,குடியரசுத்தலைவரின்
விருது பெற்ற கர்னல் கணேசனைப் பற்றி தெரிந்துகொள்ளவோ காலமும் நேரமும் இல்லாத நமது மக்கள்
பிரதிநிதிகளைப்பற்றி நாம் என்ன சொல்வது.?
வாழ்க ! தமிழகம் !
வளர்க்க நமது நாட்டுப்பற்று.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968