"வல்லமை படைத்தவர்கள் கொள்ளையில் பதுங்கிவிட இல்லாமை-ஏழ்மையோடு பார்ப்பனப் பொல்லாமைப்போரில் நிற்கும் நல்லவனே - வல்லவனே நடைபோடுவேன் உனது வழி" என்று 94 வயதுவரை இந்த சமுதாய மக்களுக்காகப் போராடிய தந்தை ஈ.வே.ரா. வின் வழிநின்று தனது 73 வது வயதில் மறைந்த சங்கமித்ரா என்னும் பா.ராமமூர்த்தியின் "வாழ்வும் பணியும் -மக்கள் தணிக்கை " என்ற நூலின் தலைப்பு இது.
நாளை நடைபெறவிருக்கும் இணையதள நூல் வெளியீட்டு விழாவில் நூலைப்பற்றியும் நூலாசிரியரான "புதிய மாதவி"பற்றியும் தெரிந்துகொள்ள தேடுகையில் மேலே உள்ள புத்தகம் கிடைத்தது.
80 பேர்கள் புகழ்பெற்ற மனிதர்களின் பதிவுகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் "புதிய மாதவி "என்ற எழுத்தாளரும் வித்தியாசமான முறையில் சங்கமித்ராவைப்பற்றி எழுதியிருக்கிறார்.
சுமார் 15 ஆண்டுகளுக்குப்பிறகு அந்தப் புரட்சி எழுத்தாளர் "புதிய மாதவியை " சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அது மட்டுமல்லாது அவரது "பச்சை குதிரை "என்ற நூலைப் படிக்கவும் அதன் விமரிசனங்களை படிக்கவும் நேர்ந்தது.
எல்லாவற்றிக்கும் மேலாக அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இணையதள வெளியிட்டு விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
பெரிதும் மகிழ்கிறேன்.
நூல் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794