தங்களது அதிகாரியை எத்தனையோ சிப்பாய்கள் வாழ்க்கையில் மறவாமல் மனமாரப் போற்றும்படி நடப்பது அதிகாரிக்குக் கிடைக்கும் பெரும்பேறு
இராணுவத்தில் அதிகாரிகளின் பங்கு ஒரு அற்புதமான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. படிப்பறிவும் தேர்வில் வெற்றி
பெற்ற திறமையுமே ஆரம்ப காலத்தில் அதிகாரியாவதற்கான தகுதிகளாகக் கொண்டாலும், காலப்போக்கில் அதிகாரிகளின் தன்னிகரில்லா
நாட்டுப்பற்றும், தலைவனுக்கே உரித்தான தியாகங்களும் எல்லா நிலைகளிலும் ஒரு சிப்பாயைவிட உயர்ந்து நிற்கும் குண நலன்களுமே
அவர்களை ஒரு சபையின் முன்னே நிறுத்துகின்றது. அதிகாரிகள் தம் படைப் பிரிவின் பாரம்பரியப் பெருமைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்;
அத்தோடு நின்றுவிடாது புதிய பெருமைகளையும் உருவாக்க வேண்டும்; நாள்தோறும் மாறிவரும் உலகில் ஊடகப் பரிமாணங்கள் பலமடங்கு
முன்னேறிவிட்டன. அறிவியல் வளர்ச்சியில் மனிதன் இயற்கையுடன் சளைக்காமல் போட்டியிடுகின்றான்.
அதிகாரிகளாக இருப்போர் தங்களது அறிவின் முதிர்ச்சியையும், செயலாக்கத் திறமை, மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலை, சமுதாய மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு
ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள ஒரு பொழுதும் தயங்கக் கூடாது. எத்தனையோ சிப்பாய்கள் வாழ்க்கையில் தம்மை மறவாமல் போற்றுகிற
வண்ணம் நடந்து கொள்வது அதிகாரிகளுக்குக் கிடைக்கின்ற மாபெரும் விருது. அதற்கு ஆளூமைப் பண்பும் தலைமைப் பண்பும்
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உதவும் என்பதை நினைவில் கொண்டு கடமையாற்ற வேண்டும். .
Colonel. P.Ganesan, B.Tech.V.S.M ( Retd ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794