ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே
வேல் வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக்கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக்கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்
களிறெறி ந்து பெயர்தல் காளைக்கு கடனே.
கிராமப் புறங்களில் நாலைந்து வயதுக்குள் கிராமத்திற்கே உரித்தான வீர விளையாட்டுகளை குழந்தைகள் தன்னாலேயே கற்றுக்கொள்வார்கள். ஆனால் பள்ளிக்குச்செல்வதும் கல்வி கற்பதும் அங்கு அவ்வளவு சுலபமாக நடைபெறுவதில்லை.
அப்படிக் கட்டிப்பிடித்து இழுத்துக்கொண்டு போனாலும் எவ்வளவோ சிறுவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிக்கூடத்திற்கு தினமும் நாலைந்து கி .மீ.நடந்து போகவும் அதே நாலைந்து கி.மீ நடந்து வரவும் வேண்டுமென்றால் சிறுவர்கள் கல்வியைத் தவிர்ப்பது புதுமையில்லை.
ஆனால் அப்படிப்பட்ட இடத்திலிருந்து கல்வி கற்ற ஒரு மாணவன் உலக உருண்டையின் கீழ்க் கோடியான தென் துருவத்திற்கு இம் மாபெரும் தேசத்தின் விஞ்ஞான ஆய்வுத்தள தலை வனாக சென்று வந்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா ?
இப்படி நம்பமுடியாத நிகழ்வுகள் நடக்கின்றன. நாம்தான் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை.
வாருங்கள். ! திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உயர்நிலலைப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் உதவிடுங்கள்.
சன்னாநல்லூர் கிராமத்தில் ,"அகத்தூண்டுதல் பூங்கா " என்ற சுய முன்னேற்ற சிந்தனை அரங்கத்தில் ஒன்றுகூடுவோம் .
ஆரம்பத்தில் கழக உயர்நிலைப்பள்ளி என்றும் பின் நாளில் அரசாங்க ஆண்கள் உயர்நிலைப்பள்ளி என்றும் மாற்றம் பெற்ற இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் உலகின் எப்பகுதியிலிருந்தாலும் தொடர்புகொள்ளுங்கள் .
கர்னல் பா .கணேசன் .
செல்.; 9444063794,9884060671,
044-26163794
திரு .புகழேந்தி ,ஆசிரியர்
9443974897
ஒரு அறிமுக தேநீர் விருந்து இம்மாதம் கடைசியில் நடைபெறலாம்.(around 28 Aug 2018).ஆர்வலர்களைப்பொறுத்து மற்ற நிகழ்வுகள் நடைபெறும்.ஒருங்கிணைப்புக் கூடம் எப்பொழுதும் "அகத்தூண்டுதல் பூங்கா "வாகவே இருக்கும்.
சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா .
வாருங்கள் ! நண்பர்களே !
நினைவுகள் மலரட்டும்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794