` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வியாழன், 27 ஆகஸ்ட், 2020

பனி உலகை ஆண்ட பாரதப் புதல்வர்கள்.

இந்தியா உலக உருண்டையின் கீழ்க் கோடியான தென் துருவத்தில் தனது முதல் ஆய்வு தளமான தக்ஷிண்கங்கோத்ரியை 1984 ,Feb 24 அன்று கட்டி முடித்து அன்று முதல் ஒவ் வொரு ஆண்டும் சுமார் 15 -20 பேர்களடங்கிய குளிர்காலக் குழுவை அனுப்பி வருடம் முழுவதுமான ஆய்வுப்பணியைத் தொடர்கிறது. இப்படி ஆரம்பித்த ஆய்வுப்பணியின் 5 வது குளிர்காலக் குழுவின் தலைவராகத் தேர்வானவர் கர்னல் பாவாடை கணேசன்





தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் தனது குழுவினருக்கு இவர் விடுத்த செய்தி இது. இவரையும் சேர்த்து 15 பேர்களடங்கிய குழுவில் இவரது படைப்பிரிவில் பணியாற்றி இவருடனே வந்திருக்கும் ஸ்ரீகுமார் என்பவரைத்தவிர வேறு யாருமே முன்பின் அறிமுகமில்லாதவர்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையில் யாருடைய தலைமையில் பணியாற்றப் போகிறோம் என்பது பற்றி ஒருவருக்கொருவர் அறிமுகம்,மற்றும் கலந்துரையாடல் அவசியம் என்பதை கர்னல் உணர்ந்தார்.உயர் அதிகாரிகளும் சாதாரண சிப்பாயும் ஒன்றாக உண்டு,உறங்கி பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.





இந்த பரந்த உலகில் டெலிபோனைத்தவிர எந்த தொடர்புமில்லாமல் அவர்கள் பணியாற்ற வேண்டும்.வெண்பனிப் பர ப்பைத்தவிர வேறு மரம் செடி கொடிகளையோ, உயிரினங்களையோ பார்க்கமுடியாது. வருடம் முழுவதும் வீசும் பனிக்காற்றில் எந்த பொருளையும் வெளியில் விட்டு வைக்க முடியாது.





வெளியில் கிடைக்கும் பொருள்களை உடனே அடையாளம் காணமுடியவில்லையானால் அவை பனிக்காற்றில் மூழ்கிவிடும்.





குளிர்காலம் முழுவதும் தேவையான எரிபொருள் ஹெலிகாப்டரிலிருந்து தள்ளிவிட்டு விட்டு அவர்கள் இந்திய திரும்பிவிட்டனர். கர்னல் கணேசன் அவசரம் அவசரமாக அந்த இடங்களிலெல்லாம் மூங்கில் நட்டு வைத்தார்.பின்னர் நேரம் கிடைக்கும்போது அவைகளை பாதுகாப்பாக மேடை மீது வைக்க வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் அவரும் மற்ற உறுப்பினர்களும் நலமாக இருப்பதோடு பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும்.அண்டார்க்டிகாவிலிருந்த காலம் முழுவதும் கர்னல் கணேசன் மிகவும் கவனமுடன் செயல் பட்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. முதல் முறையாக தக்ஷிண் கங்கோத்ரி ஆய்வுதளம் வெளிநாட்டவர்களால் பார்வை இடப்பட்டது.





எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து "பனிஉலகையாண்ட பாரதப் புதல்வர்கள் "என்ற பெருமையுடன் அவர்கள் இந்திய திரும்பினார்.







கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968