இந்த உலகில் இரு சிறு மணல் துகள்கூட ஒரேமாதிரி இருப்பது இல்லை. அப்படி இருக்கும்போது மனிதர்கள் வேறுபடுவார்கள்
என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இன்னொருவரைப்போல் நாம் இல்லையே என்றோ அவனது தந்தையைப்போல் நம் தந்தை இல்லையே என்றோ அக்கரைப்பச்சையைக்
கண்டு ஏங்கி உங்களுக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதீர்கள்
தாழ்வு மனப்பான்மை பிறப்பதே ஒரு கற்பனையான மன நிலையில் தான். மகிழ்ச்சி ஒரு மனநிலை என்பார்கள்.Happiness is a state
of mind.உங்களை நீங்கள் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
தாழ்வு மனப்பான்மை ஆக்க பூர்வமான எண்ணங்களை அழித்து விடுகின்றன. கழனியில் விளையும் பயிகளுக்கிடையே களை எடுப்பது மிக
மிக அவசியம்.அது போன்று உங்கள் மனம் என்னும் பூங்காவிலே அவ்வப்பொழுது களை எடுத்து உரமிட்டு உண்மைப் பயிர் வளர்க்க
முயற்சியுங்கள்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794