` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 23 பிப்ரவரி, 2022

காயமே கோயில்

மனிதப்பிறவியின் மகத்துவம் பற்றி நான் படித்த நீதிநூல்களைக்கொண்டும் அனுபவ பூர்வமாக நான் அறிந்துகொண்டதிலிருந்தும் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய பதிவு செய்து வருகிறேன்.

சமணம் சார்ந்து ,"தருமசேனர் "என்று பட்டம் சூட்டப்பெற்ற மருள்நீக்கியார் சகோதரி திலகவாதியாரின் அருந்தவத்தால் சைவம் திரும்பி திருவாவுக்கரசர் என்று பெயர் சூட்டப்பெற்று ஏராளமானப் பதக்கங்கள் பாடியிருக்கிறார்.

Thirunavukkarasar (Appar) Thevaram mentions eight kinds of temples. They include They are: 'Perunkoyil', 'Karakkoyil', 'Gnalarkoyil', 'Koudikkoyil', 'Ilamkoyil', 'Manikkoyil', 'Alakkoyil', 'Madakkoyil' and 'Punkoyil.'

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங் கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்(டு) ஏத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே

- திருநாவுக்கரசர் தேவாரம்-
மானுட ஜென்மத்தின் சிறந்த குறிக்கோளை திருநாவுக்கரசர் இப்படி விளக்குகிறார்.-

காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மன மணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே

மனிதன் தன்னை எந்நிலைக்கு வேண்டுமானாலும் உயர்திக்கொள்ளலாம்.இது மானிட ஜென்மத்துக்குரிய தனிச்சிறப்பு.

நூறு பசுக்களை ஆராய்ந்தால் பசுவின் இயல்புதான் வெளிப்படும்.அவ்வாறே நூறு பாம்புகளை ஆராய்ந்தால் அணைத்திடத்தும் பாம்பின் இயல்புதான் வெளிப்படும்.நூறு புறாக்களை ஆராய்ந்தால் புறாவின் இயல்புதான் வெளிப்படும்.ஆனால் நூறு மனிதர்களை ஆராய்ந்துபார்த்தால் நூறுபேறும் மனித இயல்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.மனிதர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட இயல்புடையவர்களாக இருப்பார்கள்.அதாவது நாம் இஷ்டப்பட்ட எந்த நிலைக்கும் நம்மை உயர்த்தவோ தாழ்த்தவோ செய்துகொள்ளலாம்.

வெள்ளத்தனைய மலர் நீட்டம்,மாந்தர்தம்
உள்ளத்தனைய துயர்வு

என்பது திருக்குறள்.

மனிதனின் ஐம்புலன்களான மெய் ,வாய்,கண்,மூக்கு,செவி என்று உறுப்புகள் நல்லது கேட்டது, வேண்டியது,வேண்டாதது என எல்லாவற்றையும் ஈர்க்கிறது. விருப்பப்பட்டாலும் விரும்பாவிட்டாலும் உடல் வளர்ச்சி பெறு கிறது ஆனால் உயிர் தன்னால் வளர்வதில்லை. அது வளர்க்கப்படவேண்டும்.உடல் வளர்ச்சி 14-15 வயதில் காம எழுச்சி காரணமாக இன உறவைத்தேடுகிறது.அந்நிலையில் சரியான உயிர் வளர்ச்சி இல்லை என்றால் உடலின் தாக்கம் மனதை பாதித்து காம எழுச்சியைக் காதல் என்று விளக்கைத்தேடி விழும் வீட்டில் பூச்சிகளாக இளைஞர்கள் சீரழிகிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் "மனவளக்கலை "நடத்தப்படவேண்டும்.இளம் வயதில் தனது வாழ்வின் குறிக்கோள் என்ன என்று ஒவ்வொரு மாணவ மாணவியரும் மனதில் உருவகப் படுத்திக்க கொள்ளவேண்டும். சுமார் 15 வயதில் ஆரம்பிக்கும் இந்த தற்பரிசோதனை சுமார் 25 வயதிற்குள் சில மாற்றங்களுக்கு உட்பட்டு ஸ்திரப்படுத்தப்படும்.அதன் பிறகு உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர் ,ஆசிரியர்,நண்பர்கள் ,சுற்றுப்புற சூழ்நிலை போன்றவற்றின் தாக்கம் இருக்கும்.ஆனால் மனம் விழிப்படைந்து சுய சிந்தனை ஏற்படுமானால் அவன் "தானே தனக்கு தலை விதி "என்பதை உணர முடியும்.அப்படி சுயமாக சிந்திக்கும் மனிதர்களுக்காக கர்னல் கணேசன் நிர்மாணித்திருப்பதுதான் ,"அகத்தூண்டுதல் பூங்கா " என்ற Self Development Center ".

தமிழ்நாட்டில் ,திருவாரூர் மாவட்டத்தில்,சன்னாநல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அகத்தூண்டுதல் பூங்கா.வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருமுறை இந்த பூங்காவை தரிசிக்க முடிந்தால் அவர்கள் பணிக்கவேண்டிய பாதை தெளிவாகும்.

மனிதன் மகத்தான திறமை படைத்தவன் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.உங்களது சிறப்பான தகுதி என்ன என்பதை நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968