Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


திங்கள், 13 ஜூன், 2016

மண்ணின் மைந்தனைப் பாருங்கள்.

இராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு என்பதை பொதுமக்கள் உணர்வதில்லை.
அதிகாரிகள்,அதிகாரிகள் அல்லாதவர்கள் என்ற இருபெரும் பிரிவாக இயங்கும் இராணுவ அமைப்புகள்
ரெஜிமெண்ட், பட்டாலியன், கம்பெனி, பேட்டரி squadran,போன்ற பல பெயர்களால் அமைப்பைப் பொறுத்து அழைக்கப்படுகின்றன.
The queen of the battle என்று அழைக்கப்படும் காலாட்படைப்பிரிவு முதல் டான்குப்படை (Armoured Corps) பீரங்கிப்படை (Artillery) பொறியாளர் படை (Engineers) தொலைத் தொடர்புப் படை (Signals) போன்று
சுமார் 20க்கும் மேலான படைப் பிரிவுகளின் தராதரம் அதில் உள்ள அதிகாரிகளைப் பொறுத்தே உயர்ந்தது,தாழ்ந்தது என்று வேறுபடுகின்றன. ஒரு பொறியாளர் படைப்பிரிவு தங்களது தலைவனின் பிரிவு உபசார விழாவில் இந்தப் பாடலைப் பாடினார்கள்.

மண்ணின் மைந்தனைப் பாருங்கள்
மலர்கள் தூவி வாழ்த்துங்கள்
இதயக் கதவைத் திறவுங்கள்
இனிதே வருக! கூறுங்கள்........ (மண்ணின் மைந்தனைப் )

இன்னா நினையாப் பாரிலே
சன்னா நல்லூர் ஊரிலே
சந்தைக்கூட்ட மனிதர்களில்
விந்தைகள் புரிய அவதரித்தான்
பாலோடு பழமும் உண்ணுங்கள்
பாவாடை-தெய்வானைப் பாடுங்கள் ...............(மண்ணின் மைந்தனைப்)

உருண்டுப் புரண்டு விழுந்து எழுந்து
உருவ மாற்றம் பலவும் பெற்று
வளர்கின்றான்....வளர்கின்றான்
கல்வி கேள்வி சொல்லிச் சேர்த்த
அறிவும் பிறவும் பெறுகின்றான்..............(பாலோடு பழமும் )

எல்லைப் புறங்கள் இதய வாசல்
தொல்லை கொடுக்கும் பகைவர் படைகள்
அன்னை பாரதம் அழுகின்றாள்
ஆண்மை உள்ளோரை அழைக்கின்றாள்
அன்பு , பாசம், ஆசை, காதல் இன்ப உலகின் எல்லை ஓரம்
எல்லாம் துறந்து புறப்பட்டான்
எங்கள் மண்ணின் மைந்தன் புறப்பட்டான்
வாழ்த்து கூறிப் பாடுங்கள் ! இனிதே வருக கூறுங்கள்......(மண்ணின் மைந்தனைப்)

கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு
எட்டு திசையும் பட்டு ஒலிக்கும்
பெயரும் புகழும் பெருகவே ,பெருமை வாழ்வு மலரவே
4 ER....... எமது ER.... என்று
பாரிலுள்ளோர் பாடவே
இரவும் பகலும் ஒன்றாகவே
இன்னல்கள் களையும் ஏராகவே
தங்கத் தம்பிகளின் துணைகொண்டு -ஒரு
சிங்கம் போல அவன் வருகின்றான்
வாழ்த்து கூறிப் பாடுங்கள் ! இனிதே வருக கூறுங்கள்......(மண்ணின் மைந்தனைப் )

ஏழு கண்டம் தாண்டி இந்திய நாட்டின்
துருவக் குழுவுக்கு தலைமை ஏற்கும்
எங்கள் தலைவன் வல்லவன்
அவனின் பிரிவு .....முடிவல்ல... மீண்டும்
தொடரா உறவல்ல ........
சென்று வருக....வென்று வருக.....தலைவனே.........

இது டெல்கியிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த கர்னல் தனக்காகவே தயாரித்தது . சுமார் 1800 படை வீரர்கள் ஒருங்கிணைந்து அவருக்காகப் பாடினார்கள்.

4 Engineer Regiment என்ற அவரது படைப் பிரிவு இந்திய இராணுவத்தின் ஒரு மிகச்சிறந்த பிரிவாக பல மாமனிதர்களால் இன்றும் வழி நடத்தப்பட்டு வருகிறது.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968