` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


திங்கள், 27 ஏப்ரல், 2020

Continuing 3..........Venpaip parappilum.....

ஐந்தாம் குளிர்காலக் குழுவினிலே
அருமைத்தலைவர் கணேசனுடன்
ஐய்ந்தொரு பத்துப் பேர்களாவர்
அண்டார்க்ட்டிக்காவுக்கு சென்றார்கள்



பதினெண் மதம் பனிஉலகில்
பகலாறு மாதம் இரவும்தான்
பதியும் கால்கள் பனியினிலே
பனிவிழும் உடலில் எல்லாமே
அமைந்த ஆய்வின் அரங்கமது
அனைவரும் தங்கும் இடமாகும்
சமையல் உணவு தூங்குவதும்
சரியாய் அரங்கின் உள்ளேதான்.

அதையும் பனியது மூடிவிடும்
அகற்றும் பணியே இவர்களுக்கே
எதையும் தங்கும் இதயமதால்
ஏற்றார் கணேசன் துன்பமதை
எத்தனை எத்தனை இடையூறு
எத்தனை எத்தனை தொல்லைகளே
அத்தனையும் தன் துணிவாலே
அகற்றிவிட்டார் பனிபோலே



பனியில் மூழ்கிய இருபேரை
பார்த்துதேடிக் காப்பாற்றிய
பணியால் இவரது பண்பதுதான்
படிக்கையில் நம் மனம் பாராட்டுமே.



சமையல்காரர் குடும்பத்தில்
சகலத்தொடர்புமின்ரிருந்தார்
அமைதியாய் கணேசன் முயற்சித்தே
எல்லாத்தொடர்பும் பெற்றீந்தார்



Three Antarctic Station commanders.Novolazaravskia (Russian ) Dakshin gangothri (India ) and Georgefoster (East Germany )





பிற நாட்டாய்வோர்களைத்தேடி
பிரியா ஒற்றுமை சேர்த்திட்டார்
உறவுகள் வளர்க்கப் பாடுபட்டார்
உண்மை இந்தியன் பேர் பெற்றார்.



பதினெட்டுமாத பனிப்பாலையின்
பயங்கர அதிசய அனுபவத்தை
பதிவே செய்து நூலாக
படிக்கத்தந்துள்ளார் மிக அருமை
வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத்துளிகள்
என்ற இந்நூலே .



உண்மையாய் இதுபோல் ஒரு நூலே
உயர்தமிழ் மொழியில் வந்ததில்லை.
சாகித்ய அகடமி பார்வைக்கே
சாதனை நூலிது இதுவரையில்
போகவில்லையே ஏன் எதற்கு
புரியவில்லையே இது நமக்கு.

அண்டார்க்டிகாவுக்கு இதுவரையில்
ஆய்ந்திட சென்றவர் எதனை பேர்
கொண்டாடும் விதத்தில் நூலாக
குறிப்பாய் தந்தவர் எவருமில்லை
ஆகவே கர்னல் கணேசனாருக்கே
ஆயிரம் விருதுகள் தரலாமே
நாகரீகமெனில் இதுதானே
நம் தமிழ் உலகம் உணராதோ

டாக்டர் கோ.மா.கோதண்டம்
தலைவர் மணிமேகலை மன்றம்,
இராஜபாளையம் ,626108.
செல்;9944415322.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968