Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 17 ஏப்ரல், 2013

கட்டுப்பாடுகள்

சில கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, அதை விதிப்பவர்களுடன்
கூடிப்பேசி அந்தக் கட்டுப்பாட்டின் நன்மை தீமைகளை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது
அங்கு தலைவன் கொண்டாடப்படுகின்றான்.

கட்டுப்பாடுகள் இல்லாமல் உலகில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது. வீடு, குடும்பம், பொது வாழ்க்கை என்ற எல்லா இடங்களிலும் கட்டுப்பாட்டின் கைப்பிடிச் சுவர் வளையமிட்டு நிற்கிறது. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காவிட்டால் சாலை ஒவ்வொரு நிமிடமும் விபத்தின் கேந்திரமாகிவிடும். அதே சமயம் கட்டுப்பாடு சில வரன் முறைகளுக்குள் அமைய வேண்டும். காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாடுகள் மனிதனின் சிந்திக்கும் திறமையைச் செயலிழக்கச் செய்து விடுகின்றன. கட்டுப்பாடுகளை விதிக்கும்போது அது ஏன், அதனால் என்ன உபயோகம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

சில கட்டுப்பாடுகளை விதிக்கும்போது அதை விதிப்பவர்களுடன் கூடிப்பேசி அந்தக் கட்டுப்பாட்டின் நன்மை தீமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அங்கு தலைவன் கொண்டாடப்படுகின்றான். கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு உல்லாசம் காணப்போகும் தலைவன் கொலை செய்யப்படுகிறான். பொன் விலங்கானாலும் அவைகள் கைவிலங்குகள் என்று எண்ணுபவர்கள் இருக்கும் வரை அவைகள் கைவிலங்குகள் அல்ல; கைப்பிடிச் சுவர்கள் என்பதை விளக்க வேண்டியது தலைவனின் கடமையாகிறது.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968