It is about review of a tamil book .The book was written by Colonel P.Ganesan
about his Antarctic experiences.It is reviewed by Sivarajan.
In the year 1980 Ganesan was posted to 4 Engineer Regiment .He was holding the rank of Major
and is due for promotion to the next rank of Lieutinent Colonel which is by selection.To qualify
for selection he should have served with troops and earned reports at least 2 years before coming
for selection.So Ganesan was appointed as company commander,56 Field Company.
Sub.KSivarajan was the religious teacher of the Regiment.The Religiuos Teachers do
not teach Religion but help the soldiers in religious functions.To be qualified for
this one should have some knowledge about religion.Sivarajan had done "Saiva sidhantha Pulavar course."
The very first meeting of Sivarajan and Ganesan was in the Regimental Mandir on a Puja day.
Major Ganesan was a deep lover of tamil language and all Tamil litratures.He could be equated to
10 Religious Teachers.So in the first meeting it self Ganesan told Sivarajan like this ;
"The Commanding officer and many other officers do not know Tamil.Do not utter any non sense
stories in Mandir as I am like an advance scholar in tamil.Before every mandhir parade,
you must brief me about what you are going to speak. I will polish your script and it
will be usefull for troops as well as to you."
Sivarajan took it in the right spirit and started reading a lot about Riligeous matters.
He became an outstanding RT.I think that he has served moer than 10 years in the Regiment
and earned very good name.In the meantime Ganesan was approved for promotion and became
Commanding officer of the same 4 Engineer Regiment.No doubt that Sivarajan might have frightened
in the begining.But not only in RT matters but also in general duties Sivarajan was well
trained which later earned him honorary commission.
Even after retirement they were in contact.So Ganesan had sent a copy of his book
"வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத்துளிகள் "and requested him to write a Forward.
This is for the tamil knowing readers.
" எவன் ஒருவன் தனது பணியில் வேண்டா வெறுப்புடன் செயப்படுகிறானோ ,அவன் விபச்சாரியைவிட மோசமானவன்"என்ற வாசகத்தை
மனதில் கொண்டு ,தான் மேற்கொள்கின்ற காரியங்களில் ,முழுமனதுடனும்,வெற்றி,புகழ்,பெருமைகளைத் தன் முழுமூச்சாகக் கொண்டு
செயலாற்றி ,வெற்றியும் கண்டவர் நம் கர்னல் திரு கணேசன் அவர்கள்.அவர்களுடன் பத்து ஆண்டுகாலம் நேரிடையாகப் பணியாற்றும்
வாய்ப்பு எனக்கு கிட்டியதில் பெருமையடைகிறேன்.
இக்காலத்தில் யாருக்குமே 100 % வரை தன் விரும்பிய படிப்பே படிக்கமுடியாதபோது ,விரும்பிய வேலையை அடைவதும் குதிரைக்கொம்புதான்.
இருந்தாலும்,அந்த வகையில் 99 % மனிதர்கள் தம் மனசாட்சிக்குப் பிடிக்காத ,தமக்கு வாய்த்த வாய்ப்பையே ,வாழ்கையாகக்கொண்டு ,
தாம் வாழ்கின்றவரையில் ,பற்றுதல் இல்லாமல் கடைப்பிடித்து ,காலத்தைக் கடத்துவதிலேயே கவனத்தைச்செலுத்தி வாழ்ந்துவருவது
கண்கூடு.அந்த விருப்பப்பட்ட வாழ்க்கை ,விருப்பப்பட்ட கல்வி,விருப்பப்பட்ட வேலை ஒரு சிலருக்கு அமைவதும் உண்டு.இது எங்கோ
ஒன்றாகத்தான் அமைகின்றது.இன்னும் சிலர் கிட்டிய வாய்ப்பையே மனதில் ஒட்டிக்கொண்டு வாழ்ந்து முடிக்கின்றனர் என்பதுதான் உண்மை.
உண்மை,உழைப்பு,உறுதி,உயர்வு இதில் உவகையைக் கூட்டி தன் சுவாசத்தை ஒரு நெறிப்படுத்தி வாழ்ந்துகாட்டி வருபவர் நம் கர்னல் அவர்கள்.
அவர்களின் திட்டமிடுதலும்,திட்டத்தில் வெற்றி ஒன்றே நோக்கம் என்ற உறுதிப்பாடும் ,அதற்கான செயல்பாட்டில் சிறிதும் கவனச்சிதறல்
கொள்ளாது கடமையை ஆற்றி அதில் வெற்றியும் காண்பவர் ஆதலால் ,அவருக்கு ,"அண்டார்க்டிக்கா ஒரு பெரிய சாதனைக்களமாக
அமைந்தது இயற்கையின் நன்கொடைதான்.
இறைவன் செயலானது மனிதர்க்கு,எந்த அளவில் சோதனைகளைத் தாங்கமுடியுமோ அந்த அளவைவிட சற்று அதிகமாகவேக் கொடுத்து ,
அவற்றால் அவரது சாதனைகளில் லாபமடையச்செய்து பேறும் புகழும் பெறச்செய்து வருகின்றது.இது அவரவர் வாழ்வில் ஏற்படும்
அனுபவத்தில் மட்டுமே தெரிந்துகொள்ளக்கூடிய செயலாகும்.அதை,இயற்கை அல்லது இறைசித்தம் என்றும் சொல்லலாம்.
கர்னல் அவர்கள் இயல்பாகவே " முயற்சி திருவினையாக்கும்,முயலாமை இன்மை புகுத்திவிடும் "என்பதை அறிந்து முயற்சியில் கவனம் செலுத்தி ,
வெற்றி கண்டு பழக்கப்பட்டவர்.ஆனால் அனைவரும் அப்படி வாழ்க்கையை ஒரு சாதனைகளமாக மாற்றிக்கொண்டு வாழ்க்கையில்
போராட்டம் காண்பதை விட்டு வாழ்க்கையே போராட்டமாகவே இருக்கட்டும் என்பதில் விருப்பம் கொள்ளமாட்டார்கள்.இந்த
வகையில்தான் இக்காலத்தில் பெரும்பான்மையோர் ,அதற்காகக் காலத்தையும்,வசதியையும்,வாய்ப்பையும் விட்டுக்கொடுத்து
வாழ விரும்பாதவர்கள்தான் இன்னும் அதிகம்.அதுதான் உண்மையும் நோக்கமும் கூட.
தேடிச்சோறு நித்தம் தின்று......வீழும் வேடிக்கை மனிதனாகி விட்டுப்போகும் பலரின் நடுவில் வாடிக்கையையும் எதிர் வேடிக்கையாக்கி ,
வெற்றி காண்பதிலேயே மனப்பூர்வமான நிம்மதியைக் காணும் நோக்கம் கொண்டு வாழ்பவராதலால்,அவரது உண்மை உணர்வுக்கு ஒரு
வாய்ப்பாக அமைந்தது "அண்டார்க்டிக்கா வெற்றி பயணம்."அந்த வாய்ப்பு கிட்டாவிட்டாலும் மற்றவர்களைவிட இன்னும் வேறுவகையில்
எதையாவது சாதித்து ,வித்தியாசப்பட்டு புகழ்பெறக்கூடியவர்தான் அவர்.அது தான் கர்னல் கணேசனுடைய தனித்தன்மை.
அவர் மேற்கொண்ட முயற்சி ,இந்நாட்டிற்கும் ,தம் வீட்டிற்கும்,தனக்கும், பெருமைசேர்க்கும் செயலாக அமைந்தது வியப்பு ஒன்றும்
இல்லாவிட்டாலும்,மற்றவர்களைவிட புதிய கோணம்,புதிய முயற்சி,புதிய சிந்தனை புதிய செயலாக்க விளைவுகளையே சந்தித்த
சாதனைகளின் உண்மை வரிவடிவமே இந்த "வெண்பனிப்பரப்பில் சில வியர்வைத்துளிகள்" என்ற நூலாகும்.
இந்நூல்,இக்கால இளைஞர்களுக்கு ஓர் வழிகாட்டி.மேலும் காலத்தை விரயம் செய்தவர்களுக்கும் சாதனையே அறியாமல் ,
வேதனையே தம் விருப்பப்பாடமாகக்கொண்டு,பழகிப் போனவர்களுக்கும் ,விரும்பினாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லையே
என்ற ஏக்கப் பெருமூச்சுடையோர்க்கும்,மேலும் நாட்டுப்பற்றுக்காக,கடமை உணர்வுடன் அண்டார்க்டிக்காவில் சந்தித்த ஜேர்மனிய
விஞ்ஞானி Prof.Dr.Rudolf Meier தம் 62 வயதிலும் நமது கர்னல் கணேசனாரின் 48 வயதில் சந்தித்தது போன்ற நல்ல உள்ளம்
கொண்டவர்களுக்கு,மேலும் ஊக்கத்தை வளர்ப்பது.வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள விரும்பாது காலம் கடத்திப்
பழக்கப்பட்டவர்களுக்கும் கூட பாடநூலாக அமையும் என்பது எனது கருத்தாகும்.
ஆற்றொழுக்கான தமிழ் நடையும்,அறிவிக்கப் புகும் கருத்துக்களின் கோர்வையில் ஓர் நிறைவான வழிமுறையையும் ,
பட விளக்கங்களையும்,புகைப்படங்களையும் இனத்துத் தொகுக்கப்பட்ட இந்நூலை (அவர் தினமும் டைரி எழுதும் பழக்கமுடையவராதலால்
மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளதை ) பலரும் பாராட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்நூல் அவரது சாதனைகளுக்கும்,சிந்தனைகளுக்கும்,சில படிக்கட்டுகளைத்தான் நமக்குத் தெரிவிக்கின்றது.இன்னும் படிகள் வளரட்டும் ,
சாதனைகள் தொடரட்டும் என்பது எனது பிரார்த்தனைகள்.கிட்டத்தட்ட அல்ல,முழுமையாக பதினெட்டு மாதங்கள் பனியிடை பணியாற்றிய
இவரது செயல்பாடுகள் இன்னும் மேலும் தொடர்ந்திருக்கக்கூடும்,ஆனால் விதிமுறைகள்தான் தடைகளே தவிர இன்னும் அவரை செலாற்ற
விட்டிருந்தால் இன்னும் பல சாதனைகளை சிந்தித்து தென்துருவத்தில் புதிய விளையாட்டுத் திடல்களையும்,போட்டிகளையும் கண்டுபிடித்து,
நம் பாரதத்திற்குப் பெருமை சேர்த்திருப்பார்.
வாழ்க அவரது உறுதிகொண்ட உள்ளம்,வளர்க்க அவரது தொண்டுள்ளம்,நீடு புகழ் பெருகி நீண்ட வரலாறு படைத்த அவரது எழுத்துப்
பணியும்,மொழிப்பற்றும்,மென்மேலும் சிறக்க இறையருள் புரிக !
கண்ண ..சிவராசன் ,
18,காமராஜ் நகர்,சிதம்பரம்.,608001
( பி.கு ) திரு சிவராசன் சில ஆண்டுகளுக்கு முன் இதய நோய் காரணமாக இறந்துவிட்டார் என்பது வருத்தமான செய்தி.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968