சென்ற ஆகஸ்டு 16 ம் நாள் சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா வளாகத்தில் "அறிவியல் அரங்கம் " தொடங்கப்பட்டது என்பதை வலைப்பூ வாசக நண்பர்கள் அறிவார்கள்.
பேரளம் வேதாத்திரி மகரிழி ஆஸ்ரம தலைவர் டாக்டர் அழகர் ராமானுஜம் அவர்கள் தலைமையில் திருவாரூர் மத்திய பகலைக்கழக டாக்டர் தங்க
ஜெயராமன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் அமுதா, மயிலாடுதுறையிலிருந்து டாக்டர் இளங்கோவன் போன்ற அறிவியல் அறிஞர்கள்
கலந்துகொண்டு அடுத்து இந்த இடத்தையும் இங்கிருக்கும் வசதிகளையும் எப்படி இளையோருக்கு மனவளக்கலையில் ஊக்கம் பெரும் விதத்தில் பயன்படுத்தலாம் என்று
விவாதிக்கப்பட்டது.சென்ற ஆகஸ்டு 16 ம் நாள் சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா வளாகத்தில் "அறிவியல் அரங்கம் " தொடங்கப்பட்டது என்பதை வலைப்பூ வாசக நண்பர்கள் அறிவார்கள்.
பேரளம் வேதாத்திரி மகரிழி ஆஸ்ரம தலைவர் டாக்டர் அழகர் ராமானுஜம் அவர்கள் தலைமையில் திருவாரூர் மத்திய பகலைக்கழக டாக்டர் தங்க ஜெயராமன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் அமுதா,
மயிலாடுதுறையிலிருந்து டாக்டர் இளங்கோவன் போன்ற அறிவியல் அறிஞர்கள் கலந்துகொண்டு அடுத்து இந்த இடத்தையும் இங்கிருக்கும் வசதிகளையும் எப்படி இளையோருக்கு மனவளக்கலையில் ஊக்கம் பெரும் விதத்தில் பயன்படுத்தலாம் என்று விவாதிக்கப்பட்டது.
இங்கு ஏதும் வகுப்புகள் நடத்துவதை விட இளையோர்கள் இங்கு வந்து இந்த அமைப்பின் "தன்னிகரில்லா"வரலாற்றை அறிந்துகொண்டு தங்களது வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்வது என்று சிந்திப்பார்களேயானால் அந்த சிந்தனை செயல்
வடிவம் பெற்று அவர்களுக்கும் அவர்களது வீட்டுக்கும் இந்த இந்தியத் திருநாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்பதில் சிறிதளவிலும் சந்தேகமில்லை.
இந்த அமைப்பின் பெயருக்கேற்ப அவரவர்களது அகம் தூண்டப்படவேண்டும். சிந்தனைதான் அறிவைத்தூண்டுகிறது. இந்த அமைப்பின் தலைவர் கர்னல் கணேசன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதுபோல் "மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது."
தனக்குள்ளேயே இல்லாமை, இயலாமை, ஏழ்மை போன்றவைகளைக் கற்பனை செய்துகொண்டு முடங்கிப்போய்விடாதீர்கள் என்பதுதான் இந்த அமைப்பு வெளிஉலகிற்கு விடுக்கும் செய்தியாகும்.
இதன் காரணமாக சென்ற அக்ட்டோபர் 23 ம் நாள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் ஜெயராமன் அவர்கள் தலைமையில் சுமார் 25 ஆய்வு மாணவர்கள் அகத்தூண்டுதல் பூங்காவிற்கு வருகை புரிந்தனர்.
இங்கு ஏதும் வகுப்புகள் நடத்துவதை விட இளையோர்கள் இங்கு வந்து இந்த அமைப்பின் "தன்னிகரில்லா"வரலாற்றை அறிந்துகொண்டு தங்களது வாழ்க்கையை
எப்படி வடிவமைத்துக்கொள்வது என்று சிந்திப்பார்களேயானால் அந்த சிந்தனை செயல் வடிவம் பெற்று அவர்களுக்கும் அவர்களது வீட்டுக்கும் இந்த இந்தியத் திருநாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்பதில் சிறிதளவிலும் சந்தேகமில்லை.
இந்த அமைப்பின் பெயருக்கேற்ப அவரவர்களது அகம் தூண்டப்படவேண்டும்.சிந்தனைதான் அறிவைத்தூண்டுகிறது .இந்த அமைப்பின் தலைவர் கர்னல் கணேசன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதுபோல் "மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது."
தனக்குள்ளேயே இல்லாமை, இயலாமை, ஏழ்மை போன்றவைகளைக் கற்பனை செய்துகொண்டு முடங்கிப்போய்விடாதீர்கள் என்பதுதான் இந்த அமைப்பு வெளிஉலகிற்கு விடுக்கும் செய்தியாகும்.
இதன் காரணமாக சென்ற அக்ட்டோபர் 23 ம் நாள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் ஜெயராமன் அவர்கள் தலைமையில் சுமார் 25 ஆய்வு மாணவர்கள் அகத்தூண்டுதல் பூங்காவிற்கு வருகை புரிந்தனர்.
பல்கலைக்கழக பேரூந்து.
டாக்டர் ஜெயராமன்
மாணவர்களுடன் டாக்டர் ஜெயராமன்.
மாணவர்களின் ஆர்வம்..
போக்குவரத்திற்கு மிக சுலபமாகவுள்ள இந்த அகத்தூண்டுதல் பூங்காவிற்கு இதுபோன்று தங்களது மாணவமாணவிகள்உ வாழ்வில் உயர்ந்து பெயரும் புகழும் பெறவேண்டும் என்று விருப்பப்படும் ஆசிரியப்பெருமக்கள் தாங்களாகவே முன்வந்து அவர்களை அழைத்து வரவேண்டும்.
மாணவர்களும் எதோ உல்லாசப்பயணம் என்றில்லாமல் வருங்கால வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் பயணம் என்று கொண்டு வளம்பெறவேன்டும்
வாழ்க வளமுடன்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968