` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வெள்ளி, 4 நவம்பர், 2016

பார் என் மகனே ! பார்

தாத்தா பாட்டி என்று வயதானவர்களிடம் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளருவார்கள்.
ஆனால் பெற்றோர்களும் தாத்தா பாட்டியும் உடனிருக்கவேண்டும்.அப்பொழுதுதான் பெற்றோர்களின் கண்டிப்பும் பெரியோர்களின் மன்னிப்பும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து குழந்தை நல்லவிதமாக வளரும்.

பலர் உன் நிலையில் பார்.....பார்

வியப்படையாதே
விரிந்த வானம்
வளைந்துன்னைக்காக்குது பார் ....பார்

பயப்படாதே பாரினில் உன்போல்
சரித்திரம் படைப்பதைப் பார் ......பார்.
முழுக்க முழுக்க வயதானவர்களிடம் வளரும் குழந்தைகள் கட்டுப்பாடு இல்லாமல் சுய நலமிகளாக வளர வாய்ப்புண்டு.எல்லாம் தனக்குத்தான் என்றும் எல்லோரும் தனக்காக வேலை செய்ய வேண்டும் என்றும் அவன் வளரலாம்.
பெரியார் ஈ.வே.ரா. முழுக்க முழுக்க அவர் பாட்டியிடம் வளர்ந்தவர். மிகவும் வசதி படைத்த பெரும் பணக்கார குடும்பம்.ஈரோட்டில் புரட்சிகரமாக வாணிபத்திலும் சமூகப் பணியிலும் இருந்த அவரை அரசியலுக்கு இழுத்தவர் சேலத்தில் இருந்த சி.வி.ராஜகோபாலாச்சாரியார் தான்.
வளரும் குழந்தைகளுக்கு அன்பும் கண்டிப்பும் கால நேரமறிந்து குழந்தைகளின் மனநிலையறிந்து வழங்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் அதன் கர்ம வினைகளுக்கேற்பவே பிறப்பெடுக்கிறது.
. சம்பிரதாய முறையால் தந்தையாகப்பட்டவன் சுக்கிலப் பையினுள் ஒருகோடியே ஒன்பது லட்சத்து அறுபதினாயிரம் கணப்பொழுது தங்கும் உயிர் அவனது கருணையினால் (காமமல்ல )சம்பிரதாய முறையால் தாயானவளின் சோணிதப்பையின்கண் வந்தடைகிறது.அங்கு ஆறுகோடியே நாற்பத்தெட்டு லட்ச கணப்பொழுது அவளது கருணையினாலும் கர்ம வினைகளினாலும் வளர்கிறது.
மாணிக்கவாசகரின் "போற்றித்திருவகவல்" திருவாசக வரிகள் இங்கு குறிப்பிடத்தக்கது.

மனுடப்பிறப்பினுள் மாதா உதிரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினுள் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயரிடைப் பிழைத்தும் .....
இப்படி எண்ணற்ற துன்பங்களிலெல்லாம் பிழைத்து தெய்வம் என்னும் சித்தம் உண்டாகும்போது அவன் நல்வாழ்வு வாழ முற்படுகிறான் .
வாலிப வயது வரை தாத்தா பாட்டியுடனிருக்கும் குழந்தைகள் பேரதிர்ழ்ட்டசாலிகள். ஆகா ! எது செய்தாலும் தவறு இல்லை என்னும் தாத்தா பாட்டியுடன் கொஞ்சிக்குலாவி வளர்ந்தவர்கள் எப்படி மாறுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
காலம் தான் அவர்களை அறிமுகப்ப படுத்தவேண்டும் .
தாத்தா பாட்டியின் 80தாவது வயது பூர்த்தியும் ஆயிரம் பிறை கண்டவர்கள் என்ற விழாவையும் காணும் பேரக்குழந்தைகளின் பூரிப்பு மற்றவர்களுக்கு கிடைக்காத அனுபவம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968