இராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு என்பதும் அதில் சிவில் வாழ்க்கையில் உள்ள பெரும்பாலான
தொழில் நுட்ப வசதிகளும் இருக்கின்றன என்பதும் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை.
சுமார் 15 வருட அனுபவத்துடன் இருக்கையில் கணேசன் இராணுவப் பொறியியற் கல்லுரிக்குப் உதவிப் பேராசிரியராகப் பணி மாற்றம் பெற்றார்.
கல்லூரியில் Faculty of civil Engineering,Electrical and Mechanical,Combat Engineering மற்றும் அதிகாரிகள்
அல்லாதோருக்கான Diploma Engineering பிரிவுகள் இருந்தன. பொதுவாக இராணுவப் பயிற்சிகளடங்கிய Combat Engineering
பிரிவு மிகவும் ஏற்புடையதாக எல்லா அதிகாரிகளும் விருப்பப்படுவார்கள்.
கணேசன் எந்தவிதமான இராணுவப் பின்பலமும் இல்லாமல் நாட்டின் அவசர கால நிலையில் அதிகாரியானவர். ஆகையினால் அவர் சிப்பாய்களைப்
பயிற்றுவிக்கும் Diploma Engineering wing க்கு உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
கணேசன் விளையாட்டுகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர் என்பதும் பொதுவாக எல்லா விளையாட்டுகளிலும் ஓரளவு பயிற்சி உள்ளவர் என்பதும்
பல இராணுவத்தினர் அறிந்ததே.
கல்லூரியில் சேர்ந்த சில நாட்களுக்குள் cross country race எனப்படும் சுமார் 15 கி.மீ ஓட்டப் பந்தயத்தில் சிறப்பாக வந்திருந்த கணேசனைக்
கண்ட உயர் அதிகாரி அவரை Combat engineering பிரிவுக்கு மாற்றி இளம் அதிகாரிகளைப் பயிற்றுவிக்கும் தலைவராக நியமித்தார்.
கணேசன் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரிப் பொழிந்ததைப்போல் மகிழ்ந்தார் .
எல்லா விளையாட்டுகளும் விளையாடக்கூடிய அவர் இராணுவப் பொறியியற்கல்லூரியின் Sports Secretary ஆகவும் நியமிக்கப்பட்டார்.
அவரிடம் பயிற்சிபெற்ற இளம் அதிகாரிகள் காலப்போக்கில் பதவி உயர்வுகள் பெற்று BRIGADIERS AND MAJ.GENERALS ஆனார்கள் என்பதும் இப்பொழுதும்
அவர்கள் கணேசனதுப் பயிற்சிமுறைகளை நினைவு கொண்டு நலம் விசாரிக்கிறார்கள் என்பதும் மகிழ்வான செய்திகள்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794