அய்யா வணக்கம்.
ஒரு இளைநிலை அதிகாரி பணிவோடு வணக்கம் சொல்லுகிறார். தலை நிமிர்ந்த கர்னல் பதில் வணக்கம் சொல்லி வந்தவரை அமரச் சொல்லுகிறார்.
அது ஒரு இராணுவ தளம்.இரண்டாம் உலக மகா யுத்தத்தில் George Crooss என்ற இந்தியா போர்வீரர்களுக்கு வழங்கப்படும் மிக
உயரிய வீர விருதைப் பெற்ற சுபேதார் சுப்பிரமணியத்தின் நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு இராணுவத்தளம் தயாராகிக்கொண்டிருக்கிறது.
அய்யா! பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழர் படைப் பிரிவுத் தலைவராக வந்திருக்கிறீர்கள்.
சுபேதார் சுப்பிரமணியம் நினைவு நாளை மிக பிரமாதமாகக் கொண்டாடவேண்டும்.என்ற வேண்டுகோளை முன் வைக்கிறார் கர்னலைக்
காண வந்தவர்.
ஒ! அதற்கென்ன,தாராளமாகச் செய்திடுவோம்.24 February 1944 அன்று இத்தாலியில் நடந்து கொண்டிருந்த போரில் தன்னுயிரைத்
தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பாற்றிய சுபேதார் சுப்பிரமணியத்தை யார் மறக்க முடியும்?
அவரைபற்றிய,அவரது குடும்பம் பற்றிய மேலும் விபரங்களைத் தயவுசெய்து கொண்டுவாருங்கள் என்று கட்டளை இடுகிறார் கர்னல்.
ஓரிரு வரங்கள் ஓடிமறைய எந்த விபரமும் கர்னலிடம் வரவில்லை.
முன்பு வந்த அந்த அதிகாரியை கர்னல் வரவழைக்கிறார். சற்றே கோபமாக கர்னல் கேட்கிறார்,
சுப்பிரமணியம் பற்றிய மேலும் விபரங்கள் எங்கே?
சற்றே பணிவோடு அவர் சொல்லுகிறார்.
அய்யா! சுப்பிரமணியம் போரில் கொல்லப்பட்டு இன்றைக்கு சுமார் 50 வருடங்கள் ஆகிவிட்டன.அவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கீழ
ஒத்திவாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதைத்தவிர வேறு விபரங்கள் எங்களிடம் இல்லை.ஒவ்வொரு வருடமும் அவர் போட்டோவை
வைத்து மாலை போட்டுவிட்டு சில நினைவு சொற்பொழிவுடன் விருந்து நடக்கும்
அந்த விருந்து சிறப்பாக இருக்கவேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.
சுமார் 50 ஆண்டுகளாக விருந்துண்ணும் உங்களால் மேலும் விபரங்கள் சேகரிக்க முடியவில்லை என்ற கர்னல் தனது மேஜையைத் திறந்து
சுமார் 10-15 போட்டோக்களை முன் வைத்தார்.
எல்லாம் சுபேதார் சுப்பிரமணியம் ஊர் உறவு மகன் மகள் பற்றியது.
விழிகள் விரிய வாயைப் பிளந்து கொண்டு பார்த்தவர் இவைகள் எப்படிக் கிடைத்தன அய்யா?
என்றார்.
கர்னல் " நானே என்னுடைய கேமெராவில் எடுத்தது.பங்களூரிலிருந்து பஸ்ஸில் காஞ்சிபுரம் போய் அங்கிருந்து 13 கி.மி துரத்தில் உள்ள கீழ
ஒத்திவாக்கத்திற்கு ஆட்டோவில் போய் வந்தேன்.
இந்த வருட சுபேதார் சுப்பிரமணியம் நினைவு நாளின் சிறப்பு விருந்தினர் அவரது ஒரே மகன்
சென்னையில் வசிக்கும் திரு.துரைலிங்கம் அவர்கள்.
கதையை முடித்த கர்னல் கம்பீரமாக எழுந்து நடக்கிறார்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968