` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 25 அக்டோபர், 2017

அறிவியல் அரங்கம் -நிகழ்வுகள்.-2

சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா நிகழ்வுகள் சுற்று வட்டார மக்களிடையே சில மாற்றங்களைக்கொண்டுவருவதாகத் தெரிகிறது. இந்த அமைப்பின் நோக்கமே இளைய சமுதாயம் தங்களது உடல், மன சக்தியைத்தெரிந்து உணர்ந்து செயல்பட ஆரம்பித்தார்களானால் நிச்சயம் அவர்கள் வாழ்விலும் அதன் காரணமாக அவர்களது வீடு, கிராமம், வட்டம், மாவட்டம் என்று பன்முகப் புத்துணர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை, மாணவர்களிடையே மாற்றம் ஏற்பட கல்லூரி முதல்வரும், ஆசிரியர்களும் தான் முயற்சி எடுக்கவேண்டும்.அவர்கள் மாணவர்களை அகத்தூண்டுதல் பூங்காவிற்கு அழைத்து வந்து அந்த அமைப்பின் விபரங்களை எடுத்துச்சொல்லவேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் எத்தனை கல்லூரிகள் இருக்கின்றன. அனால் ஒரு சிலர்தான் இந்தப் பூங்காவைப் பார்த்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நன்னிலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் திரு காமராஜ் அவர்கள் பூங்காவிற்கு வந்திருந்தார்கள். முதல் பார்வையிலேயே இது இளைய சமுதாயத்திற்கு ஒரு பொக்கிஷம் என்பதை உணர்ந்துகொண்டார்,கர்னல் கணேசன் மிக விபரமாக இந்த அமைப்பின் நோக்கத்தை எடுத்துச்சொன்னார். இதனால் பரவசப்பட்ட அவர் ஓரிரு நாட்களுக்குள் தங்கள் கல்லூரி முதுகலை மாணவர்கள் சுமார் நூறு பேரை அழைத்து வந்துவிட்டார்.
மாணவர்கள் வருகை பற்றி கேள்விப்பட்ட டாக்டர் அழகர் ராமானுஜம் அவர்களும் மகிவுடன் கலந்துகொள்ள வந்தார்கள்.

டாக்டர் அழகர் ராமானுஜத்தை வரவேற்கும் திரு காமராஜ்,கர்னல் கணேசன் மற்றும் திருமதி கணேசன்.

உரை நிழ்த்தும் கர்னல் கணேசன்.

நன்னிலம் அரசு கலைக்கல்லூரி முதுகலை படிப்பு மாணவர்கள்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்" என்பது அகத்திய
மாமுனியின் தேவ வாக்கு.
மாணவர்கள் தங்களது மனதின் மகத்தான சக்தியைப் புரிந்துகொண்டு அந்த சக்தியை தங்களது முன்னேற்றத்திற்குப் பயன் படுத்தினால் அவர்களது உயர்வை யாராலும் தடுக்க முடியாது.
ஆனால் தங்களது மனதின் சக்தி எவ்வளவு என்பதை எப்படி தெரிந்துகொள்வது.
முதலில் மனம் என்பது என்ன ? அது எங்கிருக்கிறது ?
டாக்டர் அழகர் ராமானுஜத்தின் விளக்கத்தைக்கேட்க மாணவர்கள் பேரதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
மனம் என்பது ஒரு அலை இயக்கம். வானொலியில் எப்படி செய்திகள் பதிவாகி ஒளிபரப்பப்படுகிறதோ அப்படியேதான் எண்ணங்கள் மனதில் பதிவாகி செயலாக வெளிவருகின்றன.
அது எல்லைகளற்றது. என்றும் உள்ளது. எப்பொழுதும் தனது தலைவனுக்கு அடிபணிந்து வேலைசெய்யக் காத்திருப்பது.

தன்னால் முடியுமா என்று சந்தேகப்படாமல், எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கித்தள்ளி ஆக்கபூர்வ எண்ணங்களில் கவனம் செலுத்தி என்னால் முடியும் என்று முயற்சிக்கும்போது உங்கள் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது.

இது மந்திரமல்ல, மாயமல்ல;
அனுபவம் சொல்லும் உண்மை.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968