` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வியாழன், 7 டிசம்பர், 2017

இராணுவ பாரம்பரியத்தை சிதைக்காதீர்கள்.

இராணுவ பாரம்பரியம் பலப்பல ஆண்டுகளாக பலவிதமான நிகழ்வுகளை மனதில் கொண்டு பல உயர் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று வரை தெருவில் நின்றுகொண்டிருந்தவர்கள் இன்று அரசியல் அரங்கத்தில் நாட்டின் நிர்வாகத்தில் அதிகார பதவியில் அமரும் வாய்ப்பு கிடைத்தால் பின் விளைவுகளைப்பற்றி சம்பந்தப்பட்ட வர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஒரு உத்திரவு பிறப்பிப்பது கவலை யளிக்கிறது.
பல திட்டங்களை தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுத்திவரும் பிரதமமந்திரி மோடி அவர்கள் எடுத்தேன்-கவிழ்த்தேன் என்று செயல்படும் அமைச்சகங்களின் உத்தரவுகளை சற்றே பரிசீலிப்பது நல்லது.
போரில் -நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த்தியாகம் செய்யநேரிட்ட முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு கல்விச்சலுகை வழங்கப்பட்டு வந்தது..நாடு முழுவதிலும் வழங்கப்படும் அந்த சலுகை ஆண்டுக்கு சுமார் 4 கோடிதான். இது சமீபத்தில் குறைக்கப்பட்டுள்ளது.
இராணுவ நிகழ்வுகள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் குறிப்பாக தீவிர வாதிகளுடன் நடக்கும் அறிவிக்கப்படாதபோர் நடக்கும்போது போரிடும் நமது இராணுவ வீரர்களின் மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடும்.?
குளிர்சாதன அறைகளுக்குள்ளே உதவியாளர்கள் கொண்டுவந்து கொடுக்கும் கோப்புகளை மேலோட்டமாகப் பார்வையிடுபவரா அந்த மனநிலையைக் கற்பனைசெய்ய்ய முடியும் ?.

நிச்சயமாக முடியாது.
அப்படிப்பட்ட கோப்புகளை பார்வையிட கடமைப்பட்டவர்கள் ஓரிரு மாதங்கள் தீவிரவாதிகளுடன் போரிடும் இராணுவ வீரர்களுடன் அந்த உயர்மலைப்பகுதியில், கடுங்குளிரில் இருந்துவிட்டு வரவேண்டும். முதிராத எண்ணங்கள் கொண்ட இளம் இராணுவத்தினர் புஷ்ப்ப மரத்தடியிலிருக்கும் ஆண்டவனுக்கு தானாகவே உதிர்ந்து அற்பணமாகும் மலர்களைப்போல் தங்களாலும் நாட்டைக் காப்பாற்றமுடியும் என்று சீறிப்பாய்ந்து சிதறிப்போகிறார்கள்.
மணவாளனை எதிர்நோக்கியிருக்கும் மனைவி,தந்தையை எதிர் நோக்கியிருக்கும் குழந்தைகள் அவர்களது எதிர்காலம் போன்றவற்றைப்பற்றியெல்லாம் இராணுவப் பாரம்பரியத்தில் ஊறித்திளைத்த உயர் அதிகாரிகளை விட யார் எண்ணிப்பார்க்கமுடியும்.?
சமீபத்தில் ஒரு ரயில் பயணத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட முக த்தோற்றத்துடன் பயணித்த ஒருவரை சந்தித்தேன்.அவர் ஒரு இராணுவ வீரர் என்றும் தீவிரவாதிகளுடன் போரிட்டு படுகாயமடைந்து காப்பாற்றப்பட்டவர் என்பதறிந்து பெருமிதம் கொண்டேன். இப்படிப்பட்ட வீர தீர செயல்கள் பாராட்டப்பட்டு விருதுகள் வழங்கப்படுவதில்லையா என்று கேட்டேன்.

அவரது பதில் ;
எல்லைப்புற இராணுவ வாழ்க்கையில் தீவிரவாதிகளுடனான போராட்டம் தினம் தினம் நடப்பதுதான். இதற்கெல்லாம் பாராட்டப்படவேண்டும், விருது வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. நான் உயிர் பிழைத்ததே இறைவனது விருதுதான்.
இந்த திருநாட்டின் பெருமக்களே !
உங்களுக்கு கண்கள் கசியவில்லையா?
ஆப்கானிஸ்தான் போர்க்களத்திலே தாலிபான் தாக்குதலிலிருந்து ஒரு வீரனைக்காப்பாற்றிய மருத்துவ செவிலியருக்கு ஆங்கிலேய அரசு "மில்டரி கிராஸ் " என்ற வீர விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கி பாராட்டிய வேல்ஸ் இளவரசர் "தன்னிகரில்லா வீரம் "என்று பெருமைப்பட்டு ஆங்கிலேய வரலாற்றில் அப்படிப்பட்ட வீர விருதுபெறும் இரண்டாவது பெண் அவர் என்று அவரைப் பாராட்டியிருக்கிறார்.
நமது நாட்டில் அப்படிப்பட்ட பரம்பரியத்தைக் கொண்டுவருவோமா அல்லது இருப்பதையும் கிள்ளியெறிவோமா ?
ஆட்சியாளர்களே ! நாட்டுமக்களே ! சிந்தியுங்கள்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968