இராணுவ வீரர்களுக்காக எழுதப்பட்டதெனினும், எல்லோரையுமே புதிய பாதையில் பயணிக்கத் தூண்டும்
சிந்தனைகளின் தொகுப்பு. சிந்திப்போம்; சந்திப்போம்
- கர்னல் பா. கணேசன். B.Tech.V.S.M. ( ஓய்வு )
பயிருடன் வளரும் களைகளைக் கிள்ளி எறிவதுபோல் இராணுவக் கோட்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய தனிமனித உரிமைகள்
விலக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை என்பது உயிர் ஓடி விளையாடி உன்னதங்கள் புரிந்து வாழ்வாங்கு வாழ்வதற்கு வழங்கப்பட்ட ஒரு நல்வாய்ப்பு. மனிதப்பிறவி ஒரு
மகத்தான பாக்கியம். அதன் நிலை உணர்ந்து வாழ்கின்ற வாழ்விற்கு ஒரு பொருள் தேட முயற்சியுங்கள். இன்றுள்ள நிலையில் தெரிந்தோ
தெரியாமலோ, உங்களின் தன்னார்வம் காரணமாகவோ அல்லது பிறரின் தூண்டுதல் காரணமாகவோ இன்று நீங்கள் இந்த மிலிட்டரி
யூனிபார்ம் உடையணிந்துள்ளீர்கள். இந்தியப் பிரஜைகளுக்கான பொது சிவில் சட்டம் தவிர இராணுவத்திற்கான சட்டத்திற்கும் நீங்கள்
உட்பட்டவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
தனி மனிதர்களின் செயலுரிமை இராணுவ சட்டதிட்டங்களால் ஒடுக்கப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன என்று நினக்காதீர்கள்.
உங்கள் வாழ்வின் நலன், உங்கள் மூலமாக இந்தப் பாரத பூமியின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பெரு நோக்கமே முக்கிய குறிக்கோள்
அவ்வளவுதான்.
இன்று முதல் மனதாலும், செயலாலும், வாக்காலும், நோக்காலும் ஒரு இராணுவ வீரனாக, இரானுவ அதிகாரியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
அக்கரைப் பச்சைக்கு ஆசைப் படாதீர்கள். தன் நிழலைக் கண்டு பயப்படாதீர்கள். வளரும் பருவத்தில் உள்ள நீங்கள் முன்னேற்றத்தை
மனதில் கொண்டு, உங்களது சொந்த சுக துக்கங்களை ஒதுக்கிவைத்து, தியாக உனட்வுடன் பணியாற்றப் பழகி, நாளைய சிறப்பான
எதிர்காலத்தை மனதில் கொண்டு மகிழுங்கள்.
சிவந்த மண் கைப்பிடி நூறு
கர்னல் பா.கணேசன்
ஐக்கியா டிரஸ்ட்
9940120341
044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794