சமீப காலங்களாக கொலை,தற்கொலை ,கூலிப்படைகள் ஆதிக்கம் போன்றவைகள் மிக அதிகமாக வெளியாகின்றன.லஞ்சம்
பொதுவாழ்வில் தலைவிரித்தாடுகிறது.காவல் துறையினரின் செயல்பாடுகள்,சிறைக் கொடுமைகள், சிறை மரணம் போன்றவைகளில் எந்த
மாற்றமுமில்லாமல் எப்போதும் போல் தொடர்கிறது.
.Ex-minister AIADMK SP Velumani raided, Rs 13 lakh, documents.
The directorate of vigilance and anti-corruption (DVAC) has filed a case against former Tamil Nadu
electricity minister and AIADMK legislator P Thangamani on charges of amassing wealth worth ₹48.5 crore,
disproportionate to his income sources.
மக்களுக்கு சேவைசெய்வோம் என்று புறப்படும் அரசியல் வாதிகளின் செயல்பாடுகள் சுரங்கம் அமைத்து கொள்ளையடித்த அலிபாபாவும்
நாற்பது திருடர்களும் கதையை நினைவுபடுத்துகிறது.வருமானத்திற்கு அதிகமான சேமிப்பு என்று பிரகடனப்படுத்தும் ஊடகங்கள்
தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் மௌனமாகிவிடுகின்றன.
கொரானா போன்ற நோய்த்தொற்று காரணமாக சென்ற மூன்றாண்டுகளாக கல்வி கேள்விக்குறியாகி இளைஞர்களின் உடலும் மனமும்
பாழாக்கிக்கொண்டிருக்கிறது.கைபேசிக் கல்வி காமத்தைத்தூண்டி இளம் பிஞ்சுகள் வெம்பி விழுந்து கொண்டிருக்கின்றன.
RISE OF ONLINE SEXUAL EXPLOITATION OF CHILDREN AND CYBER CRIME DURING LOCKDOWN
இந்நிலையில் அற்புதமான இளமைக்கல்வியும் ஆரோக்கியமான சமூகப் பாடங்களும்,நீதி போதனைகளும் பெற்று உண்மையாகவும்
நேர்மையாகவும் வாழ்க்கை நடத்தி இன்று சுமார் எண்பது வயதில் நிற்கும் என்போன்றோர் நாட்டின்,மக்களின் சமூக ஊடகங்களின் அவல
நிலை கண்டு வருந்துவதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியாதா ?இப்படிபட்டவர்களை அடையாளம் கண்டு மத்திய அரசும் மாநில அரசும்
அவர்களுக்கு கௌரவப் பதவிகள் கொடுத்து அவர்களை உபயோகப்படுத்திக்கொள்ள முடியாதா ?
முடியும். !
எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் தனக்கு எவ்வளவு கமிஷன்,தனது அமைப்புக்கு எவ்வளவு கமிஷன் என்று கனக்குப் பார்க்காத அரசு செயல் பட்டால்
இது முடியும்.
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை" என்று சொன்னவர்கள் எவ்வளவு என்று வரையறுக்கவில்லை.பொற்தேரில் பவனி வந்த
காவிரிப்பூம்பட்டினத்து செல்வசீமான் சுவேதாரண்ய செட்டியார் ,"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்ற இறைமொழி
கேட்டபின் எல்லாவற்றையும் துறந்து கோவணத்தோடு வெளியேறினார்
உடை கோவணம் உண்டு ,உறங்கப் புறத்திண்ணையுண்டு
உணவிங்கு அடை காய் இலையுண்டு,அருந்தத் தண்ணீர் உண்டு
அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு இந்த மேதினியில்
நடைகொடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே.
இவற்றையெல்லாம் படித்திருந்தும் விளக்கைத் தேடும் விட்டில் களாய் ஏன் நம் மக்கள் போய் வீ ழ்கிறார்கள்.? ஆண் பெண்
வித்தியாசமில்லாமல் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்.
Sleuths from the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) on Thursday arrested Kangeyam
Tahsildar B. Sivakami on charges of accepting a bribe of ₹60,000 at the Kangeyam Taluk office in
Tiruppur district.
குற்றம் செய்தவர்களைத் தண்டிக்க முனைந்தால் "மனித உரிமை " யை முன்னால் நீட்டுகிறார்கள்.
எப்பொழுது இவற்றுக்கெல்லாம் முடிவு ஏற்படும்.?
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968