` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வெள்ளி, 12 ஜூன், 2020

காலத்தின் பாதையில் எனது காலடிச்சுவடுகள்.



சிறு வயது முதலே பல செய்திகளையும் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருபவன் நான்.கிராமத்தில் பத்து காசுக்கு வறுத்த கடலை வாங்கினால் ஏதாவது பழைய பத்திரிகை தாளில் மடித்துக் கொடுப்பார்கள்.கடலையை சாப்பிட்டுவிட்டு அந்த பேப்பரை முழுவதும் படித்துவிடுவேன்.

அந்த பழக்கம் எழுபத்தியெட்டு வயதாகும் இன்றும் தொடர்கிறது. இதுகூட எதோ ஒரு செய்தித்தாளில் யாரோ எழுதிய கட்டுரைதான். அகழ்வாராய்ச்சி செய்வோர் கலைத்திறன் மிக்கவர்களாகவும் ,கவிஞர்களாகவும்,புலவர்களாகவும் இலக்கியத்திறன் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும்.இல்லையெனில் காலத்தின் மடியினிலே இவர்கள் அகழ்வாராய்ச்சி செய்ய முற்படும்போது கண்ணில் படுபவை வெறும் கற்களாகவும் மண்பாண்டங்களாகவும்தான் இவர்களுக்குத் தோன்றும்.

வேதபுரி என்றழைக்கப்படும் புதுச்சேரியின் வரலாற்றை காலக் கண்ணாடியாகக் காட்டும் "ஆனந்தரங்கம் பிள்ளை டைரி "யின் குறிப்புகளைப் பார்க்கும்போது அது ஒரு சாதாரண மனிதனின் நாட் குறிப்பேடு என்று ஒதுக்கிவிட முடியாது.



புதுச்சேரியில் சீரும் சிறப்புமாக இருந்து மக்களுக்கு அருள் பாலித்த வேதபுரீஸ்வரர் ஆலயம் எப்படி பிரென்ச் அரசு இடித்துத் தரைமட்டமாக்கியது என்பதை விலாவாரியாக அவர் எழுதியிருக்கிறார்.அதன் பிறகு நாற்பது ஆண்டுகள் சென்று கி.பி.1788 ல் காந்திவீதியில் மீண்டும் ஒரு வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டது. இதுபோலவேதான் புத்தகங்களும்.

The book is one of the greatest inventions of man.It is even today ,in the electronic age ,the best retrieval system yet devised.A book is the most user friendly way of storing human knowledge whether it relates to 4 or 400 different disciplines from fine arts to technology .when you hold a book it seems like any other commodity because it has weight,texture,and a feel like any other commodities. But there ends the comparison.Because unlike shoes,textiles and furniture ,it is cultural commodity: this transports it into an entirely different dimensions..



There is no short cut to feed hungry minds;Our large populations is our only assets. In the case of books ,even when 300 different people have read the contents, they are in fact for the 301 st person to drink at the fountain.



புத்தகங்களைப் படிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கால முடிவுக்குள் தங்களது அனுபவங்களை ஒரு புத்தகமாகப் பதிவு செய்வது வருங்கால சமுதாயத்தினருக்கு செய்யும் பேருதவியாகும். சுமார் 100 பக்கமுள்ள ஒரு புத்தகம் வெளிவர சுமார் ரூ.10,000 ஆவது ஆகிறது.ஒரு சாதாரண மனிதனுக்கு இது ஒரு சுமைதான். ஆனால் இந்த மனிதனின் சாதனைகளில் மதிப்பும் மரியாதையும் ஒரு சமூகம் வைத்திருக்குமானால் அந்த சமுதாயம் முன் வந்து அந்த சாதனையாளனின் எண்ணங்களை பதிவு செய்திட வேண்டும். நான் இராணுவ அதிகாரியானது ஒரு கற்பனைசெய்ய முடியாத விபத்து.அதிலும் எவ்வளவோ முன்னேற்பாடுகளுடன் இராணுவத்தில் சேர்பவர்களுக்கு கிடைக்க முடியாத அற்புத அனுபவங்கள் என்னைத்தேடி வந்தன.அந்த அனுபவங்களை உடலாலும் மனதாலும் ஏற்று கால ஏட்டில் ஒரு கல்வெட்டாக நான் பதிந்துள்ளேன்.

இதைப் பாதுகாப்பதும்,மூடி மறைப்பதும் இன்றைய இளைய சமுதாயத்தினடமே உள்ளது.



"அகத்தூண்டுதல் பூங்கா" என்று பெயரிடப்பட்ட எனது நினைவு தளங்கள் எனது பிறந்த ஊரான சன்னாநல்லூர்,வேதாத்ரி மகரிஷி ஆஸ்ரமம் இருக்கும் பேரளம் ,சென்னை அண்ணாநகரில் 17 வது மெயின் ரோட்டில் இருக்கும் எனது வீட்டின் முன்,எனது இராணுவ தளமான Madras Engineer group,Bangalore,மற்றும் National military memorial,Bangalore ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.



இராணுவ அமைப்புகள் மிகப்பெரும் பாரம்பரிய பெருமைகளைக்கொண்டது.ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் ஓய்வுபெற்றாலும் அதற்கு ஈடாக பல ஆயிரம் புதியவர்கள் இராணுவத்தில் சேருகிறார்கள்.காலமாற்றங்களுக்கு ஏற்ப பாரம்பரிய பெருமை மெருகூட்டப்பட்டு காலம் காலமாக காப்பாற்றப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் சில புதுமைகளை புகுத்தவேண்டுமானால் அந்த தலைவன் தன்னளவில் உயர்ந்த உடல்,மன , மனோதத்துவதில் சிறந்தவனாகவும் புகுத்தப்படும் புதுமைகள் காலத்தை வென்று நிற்கக்கூடியதாகவும் அடுத்து அடுத்து வரும் சந்ததியினர் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.கணேசன் பணியாற்றிய ஒரே படைப்பிரிவு 4 Engineer Regiment என்ற பொறியாளர் படைப்பிரிவு.இதில் அவர் நடைமுறைப்படுத்தியது

a) Farewell NOT Goodbye.
b)Un Known Soldiers day.

இரண்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு இராணுவம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.



இராணுவம் ஒரு நாட்டின் இரும்புக்கோட்டை என்பார்கள்.அதில் அதிகார வர்க்கம் உயர்குடிப்பிறப்பு,உயர் கல்வி ,சிறந்தசிறந்த தாரிப்புகளுக்குப் பிறகே தேர்வாகிறார்கள்.ஆனால் மனித இனத்தில் யார்வேண்டுமானாலும் தன்னுடைய திறமையால் தலைவனாக முடியும் என்பதை நடைமுறைப்படுத்தியவர் கர்னல் கணேசன்.

போற்றுவார் போற்றட்டும்,
புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்
ஏற்றதொரு செயலை செய்து முடிப்பேன்
தவறான எவர்க்கும் தலைவணங்கமாட்டேன்

என்று பணியாற்றிய இவருக்கு பெயரும் புகழும் தேடி வந்தடைந்தன என்றால் மிகை இல்லை.



கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968