Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


திங்கள், 2 மே, 2016

யாருடைய குழந்தை.

பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற.
ஒருவர் பெறக்கூடிய பதினாறு செல்வங்களுள் மக்கட் பேரும் ஒன்றாகும்.கணவன் மனைவி உடல் உறவு கொள்வதனாலேயே குழந்தை பிறந்துவிடும் என்பது தவறாகும்.பெற்ற்றோர்கள் கர்மவினை பிறப்பெடுக்கவேண்டிய உயிரின் கர்மவினை ஆகியவற்றைப்பொறுத்தெ ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறவி எடுக்கிறது

" மானிடப் பிறப்பினுள் மாதாஉதிரத்து" என்ற மாணிக்கவாசகரின் போற்றித்திரு அகவல் இங்குகுறிப்பிடத்தக்கது.

இப்படித் தாங்கொனாத்துயரத்துடன் இம்மண்ணில்வரும் குழந்தை தாயிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.ஒரு ழுமையிலிருந்து வந்த முழுமை.எடுத்ததும் முழுமை,எஞ்சியதும் முழுமை

ஒரு உயிரின் வளர்ச்சிக்கு உடல் தேவைப்படுகிறது.உயிர் வளர்ச்சி முழுமைபெறும்முன்னே உடல் மரிக்க நேர்ந்தால் உயிர் மற்றொரு உடல் தேடுகிறது.உயிரின் வளர்ச்சியை திருமூலர்

நான்கண்ட வன்னியும் நாலுகலை எழும்
தான் கண்டுகொண்ட வாயுச் ச்ரீரமுழுதொடும்
ஊண் கண்டுகொண்ட உணர்வும் மருந்தாக
மான் கன்று நின்று வளர்கின்றவாறே

என்று விளக்குகிறார்.இப்போவுலகில் உயிரின் வளர்ச்சி பலவிதமான மாய சக்திகளுக்கும் ஈடுகொடுத்து வளரும் பொழுது குழந்தை நல்லவன்,கெட்டவன்,வீரன்,தீரன்ஏழை,பணக்காரன் போன்ற உரு எடுத்து வளர்கிறது.

இதில் பெற்றோர்கள் பங்கு எங்கே இருக்கிறது.?

குயிர் குஞ்சு முட்டையை காக்கைக் கூட்டு இட்டால் அயர்ப்பின்ரி காக்கை வர்க்கின்றதுபோல்........
உயிர் வளர்கிறது.இப்படி வளரும் உயிர்க்கு பிரார்த்தனை,ஜபம் எல்லாம் தேவை இல்லை.மனம் விழிப்படையும் பொழுது உயிர் பெருமை பெறும்.

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்ற அகத்திய மாமுனியின் பாடல் இங்கு ஒப்புநோக்க வல்லது.
இப்படி வளரும் குழந்தை எப்படி உயர்வடையும்?இறைவன் பார்த்துக்கொள்வான்.

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்திவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

ிவஞானபோதம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968