உங்களது பொறுப்பு பணியாற்றுவதுதான். திருமணம் -
குடும்பம் - மனைவி - குழந்தைகள் - அவர்களது நலன்
இவைகள் எல்லாம் நீங்களே உருவாக்கிக் கொண்டது
என்பதை மறந்து விடாதீர்கள்.
ஐயோ ! நான் தவறாக இராணுவப்பணியைத் தேர்ந்தெடுத்துவிட்டேனே என்று ஒரு நாளும் வருந்தாதீர்கள். உங்களது விருப்பத்திற்கு
எதிராக எதுவுமே நடக்க முடியாது. அப்படி நடந்தது என்றால் உங்களிடம் சிந்தனைச் சீரமைப்பு இல்லை என்றும், நீங்கள் மன வளர்ச்சி
குன்றியவர்கள் என்றும் கருத நேரிடலாம். மனித மனம் ஒரு சமயம் ஒரு எண்ணத்தைத்தான் உருவாக்க முடியும். பலவிதமான
எண்ணங்களை ஒரே சமயத்தில் உருவாக்க முயற்சிக்கும்பொழுதுதான் குழப்பமும் அதன் காரணமாக எந்த ஒரு செயலும் சிறப்பாக
இல்லாமலும் போய்விடுகின்றது
யாருக்கு யார் பொறுப்பு என்பதை சற்றே சிந்தியுங்கள். உங்களது பொறுப்பு பணியாற்றுவதுதான். திருமணம் - குடும்பம் - மனைவி - குழந்தைகள் -
அவர்களது நலன் - இவைகள் எல்லாம் நீங்களே உருவாக்கிக் கொண்டது என்பதை மறந்துவிடாதீர்கள். பிளந்த மரத்தில் வாலை நுழைத்துக்
கொண்டு செருகுக் கட்டையை எடுக்க முயற்சிக்கும் குரங்கின் கதி என்னவாகும் என்பதை நினைவில் கொண்டு செருகுக் கட்டையை எடுக்க
முயற்சிக்காதீர்கள். வாலை நுழைத்துக் கொண்டது தவறில்லை. ஆனால், தக்க மாற்று வழி இன்றிச் செருகுக் கட்டையை எடுக்க முயற்சிப்பது
அறிவீனம்
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794