1972-73
கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி "பங்களாதேஷ் '"என்றபுதிய நாடாக உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சிலதினங்களே ஆகியிருந்தன.
இந்திய இராணுவத்திற்குப் பெயரும் புகழும் பெற்றுத்தந்த போர்க்களம் இராணுவ அதிகாரிகளின் திருமண வாய்ப்புகளை சற்றே பின்னுக்குத்தள்ளியிருந்த நேரமது.
சாதாரண கிராமத்து இளைஞனான அவர் யாரும் எதிர் பார்த்திராத விதத்தில் சிறப்பான இராணுவ அதிகாரியாக உருவாகிக்கொண்டிருந்தார்.
சுமார் 30 வயதைக் கடந்துகொண்டிருக்கும் அவருக்கு திருமணம் தள்ளிப்போய்கொண்டே யிருந்தது .
பள்ளிக்கூடம் பார்த்திராத பெற்றோர்கள் அதிலும் பெற்ற தாயை இழந்திருந்தார்.
சற்றே உலக நடப்புகள் பற்றி அறிந்திருந்த அவர் அண்ணன் தோல்வியில் முடிந்த தனது மண வாழ்க்கையின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நேரமது.
இந்நிலையில் சென்னை காமதேனு சூப்பர் மார்க்கெட்டில் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தாள் ஒரு பெண். அந்த இராணுவ அதிகாரியின் நண்பர் அவளைப் பார்த்துவிட்டு
இப்படிப்பட்ட பெண் ஏன் அந்த இராணுவ அதிகாரிக்கு வாழ்க்கைத்துணைவியாக அமையக்கூடாது என்று யோசிக்கலானார் .
" கோபுர வாசலிலே" என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி
"தேவதை போலொரு பெண் அங்கு வந்தாள் "என்ற பாடல் மிகவும் பிரபலமாகி எல்லா இடங்களிலும் எதிரொளித்துக் கொண்டிருந்தது.
அந்த இராணுவ அதிகாரியும் அந்த பாடலை முனு முனுத்துக்கொண்டிருந்தார் .
விண்வெளி இதை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது.அந்த தேவதை பிறந்த நாள் 26 JUNE.
பிறந்த நாள் வாழ்த்துகள் பெருமைமிகு தேவதையே.
ஒருநாள் அந்த தேவதையே அந்த இராணுவ அதிகாரியின் வாழ்க்கைத்துணைவியானார்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794