Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


சனி, 20 ஏப்ரல், 2013

தலைவன் யார் ?

வெற்றியைப் பகிர்ந்து கொண்டாடுங்கள்.

தோல்விக்கு நீங்கள் சொந்தப் பொறுப்பேற்றுக் கொள்ளூங்கள்

படைப் பிரிவினரின் உள்ளம் உருகிவிடும்.

செயலுரிமைக் கட்டளை’ பெற்றதாலேயே நீங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுவீர்கள் என்பது தவறான முடிவு. குதிரை தன்மேல் சவாரி செய்பவன் திறமைசாலி இல்லை என்று கண்டு கொண்டால் அவனைக் கீழே தள்ளிவிடும். மகா அலெக்ஸாண்டர் குதிரை புசிபேலஸ் அவர் முதலில் ஏற முயன்றபோது திமிறியது. வெயிலில் தன் நிழல்கண்டு குதிரை மிரள்கிறது என்று அறிந்து அதை சூரியனுக்கு மறுபக்கம் திருப்பி நிறுத்தியபோது அது அவருக்கு அடிபணிந்தது.

அவ்வாறு ஒவ்வொரு சின்னஞ்சிறு சந்தர்ப்பங்களிலும் உங்கள் தலைமைப் பண்பை நீங்கள் நிரூபித்தால் ஒழிய உங்கள் படப்பிரிவினர் அதை நம்ப மாட்டார்கள். நீங்கள் திறமைசாலிதான் என்பதையும், உங்கள் படைப்பிரிவில் நீங்கள்தான் சிறந்தவர் என்ற தெளிவையும் படைப்பிரிவில் எல்லோரும் பெற வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள்தான் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். வெற்றியின் களிப்பில் படைப்பிரிவின் திறமையும், தோல்வியின் துயரத்தில் தலைவனின் திறமை இன்மையும்தான் வெளிப்பட வேண்டும். வெற்றியைப் பகிந்து கொண்டாடுங்கள். தோல்விக்கு நீங்கள் சொந்தப் பொறிப்பேற்றுக் கொள்ளுங்கள். படைப்பிரிவினரின் உள்ளம் உருகிவிடும்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968