` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வியாழன், 11 ஜூலை, 2019

அறிவு என்ற விளக்கை ஏற்றுங்கள்; அறியாமை என்ற இருள் விலகும்.

வளர்ச்சி என்பது ஒரு தொடர் நடவடிக்கை.ஞானேந்திரியங்கள் என்ற மனிதனின் ஐம்பொறிகளும் இணைந்து ஒரு செயலில் உற்றுநோக்கும்போது அந்த செயல் கற்பனைக்கும் எட்டாத வெற்றியைப் பெறுகிறது.இது சரித்திரம் சொல்லும் உண்மை.விவாதங்களுக்கு அப்பாற்பட்டது .

சன்னாநல்லூரில் கர்னல் கணேசன் "'அகத்தூண்டுதல் பூங்கா " அமைத்து அங்கு ஞானவிளக்கை ஏற்றி "அறிவுத்திருக்கோவில் "என்னும் "விண் ஈர்ப்பு மையம்" ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.



அந்த பூங்காவின் நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக சன்னாநல்லூரின் சுற்று வட்டாரத்தில் மக்களிடையே மனதளவிலும் செயலளவிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

காரைக்கால் வானொலியில் கணேசன் பங்குகொண்ட "அனுபவம் அற்புதம் "நிகழ்ச்சியின் காரணமாக சுமார் 50 Km சுற்று வட்டார மக்கள் தங்களது நேரம் காலத்திற்கேற்ப அவ்வப்பொழுது வந்து பூங்காவைப் பார்த்து புது சுவாசத்துடன் போகிறார்கள்.



இது மயிலாடுதுறையிலிருந்து வந்த சில பெரியோர்கள் .அங்கிருந்து அவர்கள் சென்னையிலிருந்த கணேசனைத் தொடர்புகொண்டு பூங்கா வளாகத்தில் ஏதாவது ஒரு கோவில் அமைத்து பூஜைகள் செய்யலாமா என்று கேட்டார்கள்.

கோயிலாவது ஏதடா ? குளங்களாவது ஏதடா ?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே !
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே !
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே .
- சிவ வாக்கியர்

கணேசன் மிகவும் வருத்தப்பட்டார்.மனிதனின் வளர்ச்சிக்கு பக்தி மார்க்கம்,ஞான மார்க்கம்,செயல் மார்க்கம் ( Karma yoga ) என சில வழிகளிருந்தாலும் ஞான மார்க்கமே அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒருங்கிணைக்கும் .பக்தி மார்க்கம் மக்களை அறியாமைக்குள் ஆழ்த்தி அவர்களது சிந்திக்கும் திறனை முடக்கிவிடும்.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து மொன மொனத்து சொல்லும் மந்திரம் ஏதடா ?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?

வைஷ்ணவ மாமுனி ராமானுஜரின் வாழ்க்கையை தீவிரமாக அலசி ஆராய்த்தால் அவர் எப்படிப்பட்ட சமூக சீர்திருத்தவாதி என்பது புரியும். " மனமே கோவில் மன சாட்சியே தெய்வம்" என்னும் கணேசன் கொள்கைக்கு ஏற்புடையது இல்லை என்று மறுத்துவிட்டார். சன்னாநல்லூர் "அகத்தூண்டுதல் பூங்கா "ஒரு மாபெரும் சக்தி பீடம்.அது உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்.உங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் ஒரு மா மனிதனை வீறுகொண்டு எழ வைக்கும்.





இந்த அறிவியல் பொக்கிஷம் பற்றி கேள்விப்பட்ட நன்னிலம் ரோட்டரி சங்க அன்பர்கள் பலமுறை சன்னாநல்லூர் வந்து பார்த்திருக்கிறார்கள். கணேசன் சாதனைகளை வெளியுலகம் கொண்டுவரும் முதல் முயற்சியாக அவர்கள் சமீபத்தில் ரோட்டரியின் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் கணேசனைப் பாராட்டும் விதத்தில் ஒரு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்கள்.





மிகவும் துடிப்பாக செயல்படும் ரோட்டரி உறுப்பினர்கள் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் மகத்தான மாற்றங்களை கொண்டுவருவார்கள் என வாழ்த்துவோம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968