` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


செவ்வாய், 4 ஜூலை, 2017

எங்கிருந்தோ வந்தார்.

இராணுவத்திலிருந்து 1994 ல் 52 வயதில் ஒய்வு பெற்றார் கர்னல் கணேசன். ஒய்வு என்பது ஒரு குறிப்பிட்ட பணியிலிருந்து விடுவிப்பு என்பதைத்தவிர வேறு பொருளை தாமாகவே கற்பனை செய்துகொள்ளும் மனிதரல்ல கணேசன்.
இளமை முதலே தீவிர நாட்டுப்பற்றும் இலக்கிய மற்றும் கவிதைகளில் ஈடுபாடும் கொண்டவர் என்பதால் ஒய்வு என்பதற்கு தான் ஆர்வம் காட்டும் பல பணிகளில் ஒன்றிலிருந்து விடுவிப்பு என்று ஏற்றுக்கொண்டு மிக சாதாரணமாக அடுத்தநாளைத் தொடர்ந்தார் .
மனித வாழ்க்கை ஒரு அற்புதமான பரிசு என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு நிகழ்வுகளும் ,நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நமக்கு புதுப்புது பாடங்களை சொல்லித்தருகிறார்கள். அப்படியிருக்க ஒரு மனிதன் எப்படி ஒதுங்கியிருந்து ஓய்வெடுக்க முடியும ஆகையினால் கணேசன் தனது ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார் . பல புதிய பாதைகள் திறந்தன, பல புதிய மனிதர்களின் சந்திப்பு ஏற்பட்டது.
அப்படி அறிமுகமானவர்தான் திரு ஹரிஹரசுப்ரமணியன் அவர்கள். தீவிர நாட்டுப்பற்றுக் காரணமாக Indian Institute of Governance என்ற அமைப்பை ஏற்படுத்தி பல மாமனிதர்களை சந்தித்து இந்த இந்தியத்திருநாட்டிற்கு தம்மால் முடிந்ததை செயல்படுத்தி வருகிறார்.
இராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இராணுவத்தினரை பெரிதும் மதித்து மரியாதை கொடுப்பவர்.
கர்னல் கணேசன் தனது 30 ஆண்டு பணிக்காலத்தின் நிகழ்வுகளிலிருந்து தனது அனுபவத்தைத் தொகுத்து சுமார் பத்து நூல்கள் எழுதியிருக்கிறார். எல்லாமே தேசப்பற்றுடைய கதை, கட்டுரைகள்.

a)வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத்துளிகள்.
b)இராணுவம் அழைக்கிறது.
c)எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல்.
d)கல் சொல்லும் கதை.(தமிழ்,ஆங்கிலம் )
e)எண்ணத்தளவே வாழ்க்கை .
f)இலக்கைத்தேடும் ஏவுகணைகள் .
g)மண் மேடுகள்.
h)சங்கமமாகும் சில இணை கோடுகள் .
j)சரித்திரம் படைக்கத் தயாராகும் சன்னாநல்லூர்.
k)அகத்தூண்டுதல் பூங்கா

இவற்றில் பல நூல்களை திரு ஹரிஹர சுப்ரமணியன் படித்திருக்கிறார். சில நூல்களைத் திரும்பத் திரும்ப படித்து கணேசனுடன் உரையாடியிருக்கிறார்.
இலக்கைத்தேடும் ஏவுகணை நூல் இராணுவ வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அப்பொழுது கணேசன் எடுத்த முடிவுகள் பற்றியது. இதை பலமுறை படித்திருந்தாலும் சமீபத்தில் அவர் அனுப்பிய செய்தி இது.

Col.ji Was reading a few pages starting from your marriage to u taking over the Lt.col position in Leh.
I am not that amazed at your disciplined mind because it its extensive and passionate working with one of the finest Army in the World, but truly amazed to see your narrative flowing like Ganges.
Like in a river you take bath at one point or stretch of it and happily tell the world that I bathed in Ganges, take any page and read it gives the pleasure of going through the entire book.
In your previous birth u should have been a Patriotic writer, may be rubbing shoulders with MahaKavi and the like.
U are a measure of what this Great India is.
U will run a State or a Country in the event of another birth.
Pranams
Hariharan
www.iig.asia

இப்படி மனம் திறந்து படிக்கவும் பாராட்டவும் எத்தனைப்பேரால் முடியும்.
இப்படிப்பட்டவரை நண்பனாய், நல்லாசிரியனாய் ,குருவாய் பெற என்ன தவம் கணேசன் செய்திருக்கவேண்டும் .
இம் மாபெரும் இந்தியத்திருநாட்டில் பலப்பல கணேசன்களும் ஹரிஹரசுப்ரமணியன்களும் பரவலாகக் காணக் கிடைப்பார்கள். ஆனால் யார் அடையாளம் காண்பது.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968