` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


செவ்வாய், 25 ஏப்ரல், 2017

மின்காந்த நூலகம் cosmic Library

அன்புடையீர் !
நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 3 ம் நாள் (17-05-2017) புதன்கிழமை திருவோணம் நட்சத்திரம் கூடிய நன்னாளில் காலை 10.00 மணியளவில்
திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் பெருமைமிகு பாவாடை-தெய்வானை குடும்பத்தினர்களால் பொது மக்களுக்காக அர்பணிக்கப்பட்டிருக்கும் "அறிவூத் திருக்கோவில்" திறப்பு விழா நடைபெறும்.

பரம்பொருளே இயக்கத்தில் உயிராகி உயிர் திரட்சியில் பஞ்ச பூதங்கள் ,பேரியக்கமண்டலம் ,உலகம் இவைகளாகி உயிர் உடலோடும் உலகத்தோடும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளோடும் மெய்ப்பொருளோடும் தொடடர்புகொண்டு இயங்கும்போது அறிவாகவும் இயங்குகிறது..
இந்த இயக்கத்தைப் புரிந்துகொண்டு "அறிவே பரம்பொருள்" என்ற உணர்வை விருந்தினர்களிடையேப் பதியவைத்து இந்த ஞானாலயாவைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார்

டாக்டர் .அழகர் ராமானுஜம் ,Ph.D
தலைவர் ,வேதாத்ரி மகரிஷி ஆசிரமம் ,பேரளம்.
தொடர்ந்து சில அறிஞர் பெருமக்களும் உரையாற்றுகிறார்கள் .
அனைவரும் வருக! ஞானவெள்ளத்தில் நனைக !.

சக பயணிகளுக்காக,
கர்னல்.பாவாடை கணேசன்

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968