கிராமத்தில் பிறந்து வளர்ந்து வந்த கணேசனுக்கு நீச்சல் யாரும் சொல்லித்தரவில்லை. ஊரைச்சுற்றி ஆறு, குளம்
வாய்க்கால் என்று நீர் நிலைகள். இன்றுபோல் அவை வறண்டு கிடக்கவில்லை
மீன் குஞ்சுக்கு யாரும் நீச்சல் கற்றுத் தரவேண்டாம் என்பதுபோல் சுமார் 3-4 வயதில் குளத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டார்.
ஒருமுறை ஊர் கோடியில் இருக்கும் குடி தண்ணீர் கிணற்றில் கணேசனும் அவருக்கு 2 வயது பெரிய அண்ணனும் தண்ணீர் எடுக்க சென்றனர் . கிணற்றின்
சுவர் மேல் ஏறிநின்று குடத்தில் கயிறு கட்டி கிணற்றில் இறக்கி தண்ணீர் எடுக்க வேண்டும் .
அண்ணன் கிணற்றுமேல் ஏறி நின்று தண்ணீர் எடுத்து இரண்டு குடங்களில் நிரப்ப ஆரம்பித்தார். கணேசன் கிணற்றின் உள்ளே இறங்கி முதல் சுற்று வட்டத்தில்
நின்று கொண்டு பாட்டுப்பாடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கிராமத்து சிறு குடிநீர் கிணறுகள் சுமார் 10-15 அடி ஆழம் இருக்கும். குளிர்காலத்தில் சுமார் 7-8 ஆழத்தில் இருக்கும் நீர் கோடைகாலத்தில் சுமார் 12-13 அடி இறங்கிவிடும்.
அண்ணன் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தபோது காய்ந்திருந்த கிணற்று உள் சுவர் குடத்திலிருந்து சிதறும் தண்ணீர் காரணமாக ஈரமாகி விட்டது.
கணேசன் இதைக் கவனிக்கவில்லை.தண்ணீர் பட்டதால் காய்ந்திருந்த பாசி ஈரமாகி வழுக்கிவிட கணேசன் திடீரென்று கிணற்றுக்குள் விழுந்துவிட்டார் . அதிஷ்டவசமாக குடம் மேலே
இழுக்கப்பட்டிருந்தது ;கிணற்று சுற்றுச்சுவரில் மோதிக்கொள்ளாமல் தண்ணீரில் விழுந்த கணேசன் நீச்சலடித்துக்கொண்டு மிதக்க ஆரம்பித்தார் .
அண்ணனும் மற்ற ஊர் சிறுவர்களும் கயிற்றை கிணத்துக்குள் விட கணேசன் கயிற்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள மேலே தூக்கப் பட்டார் .
பல ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு ஹசரக்கட்டா ஏரியில் நீச்சலடிக்கத் தயாராகும் கணேசன் நீச்சல் ஒரு பன்முகப் பயிற்சி.
உடலின் எல்லா பாகங்களும் வலுவடைகின்றன .
இராணுவப் பொறியியற் கல்லூரியில் மூன்றாண்டு கால B.Tech படித்துக் கொண்டிருந்தபோது
சிறந்த நீச்சல் வீரர் என்று பரிசு வழங்கப் பட்டர்.
இன்று எழுபத்தைந்தாவது அகவையில் பயணித்துக் கொண்டிருக்கும் கணேசன் அன்று தன்னைக் காப்பாற்றிய அண்ணனுக்கு நன்றி சொல்லி
அவர் பிறந்த ஊர் இளையோர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார் .
காலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓடினாலும் அதில் நீந்தி மகிழ்வோம் வாருங்கள்.
காக்கக் தடவிய நீ காவாதிருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் ஆறுமுகவா
என்று கேட்கும் கணேசன் அவ்வையாரின் மற்றொரு பாடலை நினைவு கூறத் தவறுவதில்லை.
இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
விட்ட சிவனும் செத்துவிட்டானோ ? முட்ட முட்டப்
பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968