` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 18 மே, 2022

இலக்கைத்தேடும் ஏவுகணை

நான் எழுதிய நூல்கள் பெரும்பாலும் எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும் அதனால் எனது எண்ணங்களில் ஏற்பட்ட தாக்கமும் தான்.ஒரு நிகழ்வு ஒரேமாதிரி தாக்கத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துவதில்லை. அது மனிதர்களின் அந்தக்கரணங்களைப்பொறுத்து மாறுபடும்.இராணுவத்தில் அதிகாரிகளின் பயிற்சியும் பணியும் ஒரேமாதிரி இருந்தாலும் அவர்களின் தனி வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை.

நான் ஒரு விபத்துபோல் இராணுவ அதிகாரியானவன் என்பது பெரும்பாலோர் அறிவார்கள்.ஆனால் எனது செயல்பாடுகள் எந்த ஒரு பாரம்பரிய வழி வந்த இராணுவ அதிகாரியும் எண்ணிப்பார்க்காத புதிய பாணியில் இருந்தது. இதன் முழு விபரங்களும் "எல்லைப்புறத்தில் ஒரு இதயத்தின் குரல் " என்ற நூலிலும்,"இலக்கைத்தேடும் ஏவுகணை "என்ற நூலிலும் கிடைக்கும். இதில் இ .தே .ஏ என்ற இரண்டாவது நூல் 21 தலைப்புகளில் மிக விரிவான கட்டுரைகளடங்கியது.

1.மெய்யாய் இருந்தது நாட் செல....நாட் செல...
2. இழப்பதற்கு ஏதுமில்லாதவன் ,பெறுவதற்கும் தகுதி இல்லாதவனே.
3. விலக்கறியா இருட்டறையில்...
4.தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ....
5. நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்......
6.வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே....
7. பால்தர வந்த பழவிறல் தாயம்...
8.உண்டால் அம்ம இவ்வுலகம்...
9.பிறந்த இடம் தேடி.....
10. காக்கம் வம்மோ காதலன் தோழி ....
11.பா அல் புளிப்பினும் பகல் இருளிலும்....
12. செய்குவம் கொல்லோ நல்வினை....
13.இன்று புதிதாய்ப் பிறந்தோம்....
14.மதிவேண்டும் ! நின் கருணை நிதிவேண்டும் !
15. வாணிகப் பரிசிலேன் அல்லேன் ......
16. படைக்குநோய் எல்லாம்தான் ஆயினனே ...
17.கெளசல்யா...சுப்ரஜா......ராமபூர்வா.....
18.வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து நீ வெம்பிவிடாதே.....
19. கையுறவீசி நடப்பதை நாணிக் கைகளைக்கட்டியே....
20. ஓயும் ஜன்மம் இனி ;அஞ்சேல்.... அஞ்சேல்.....
21. அகிலமெலாம் கட்டி ஆளினும் ......

இந்த தலைப்புகளே வித்தியாசமாக இருக்கும் பொது அதில் உள்ள செய்திகளும் வித்தியாசமாகவே இருக்கும்.

இந்த நூலைப்படித்த ஒரு தமிழறிந்த Major General இந்த நூல் இந்திய இராணுவத்தினர் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டும் என்று பாராட்டு தெரிவித்தார்.ஆனால் வாங்குவோரைத்தான் இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.

காத்திருப்போம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968