நிகழ்வுகள்தான் சரித்திரமாக உருவாகிறது. சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து செயல் படுத்தப்படும் நிகழ்வுகள் காலத்தால்
அழியாத கல்வெட்டுகளாக உயர்ந்து நிற்கும்.
இராணுவம் பல பாரம்பரிய பெருமைகளைக்கொண்டது. ஒவ்வொரு படைப்பிரிவும் தங்களுக்கென சில போர்க்கள சின்னங்களையும் சம்பிரதாயங்களையும்
காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றன.
இராணுவத்தில் நேரிடையாகப் போரிலே பங்கு கொள்வோர் என்றும் அவர்களுக்கு உதவி செய்வோர் என்றும் இரு பெரும் பிரிவுகள் உள்ளன.
Armoured corps,Artillery.Engineers, Signals, and Infantry
ஆகிய படைப்பிரிவுகள் நேரிடையாகப் போரில் பங்கு கொள்ளும் அதிர்ஷ்டசாலிகள் .
இராணுவத்தைப்பற்றி முன்பின் அறிந்திராத கணேசன் ஒரு விபத்து போல் இராணுவத்தில் சேர்ந்தது மட்டுமல்லாமல் மிகவும் கௌரவமான அதிகார
வர்க்கத்தின் முதல் படியில் ஏற்றி நிறுத்தப் பட்டிருந்தார்.
இராணுவத்தின் செயல் பாட்டு முறைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்த கணேசன் தன்னை ஒரு தகுதி வாய்ந்த தலைவனாக உருவாக்கிக்கொள்ளத் தவறவில்லை.
அவரது செயல்பாடுகள் இராணுவப் பாரம்பரிய பெருமைக்கு மெருகூட்டி புதிய தடம் பதித்தன.
Un Known Soldiers Day
போர்க்களத்திலே வீர சாகசம் புரியும் மாவீரர்களை எல்லோரும் அறிவார்கள். ஆனால் அவர்களை விட அதிகமாகப் பல செயல்கள் புரியும் வீரர்களை
இந்த சமூகம் தெரிந்துகொள்வதில்லை.
மனம் கொண்ட துணைவர்க்கு
விடை தந்து வேல் தந்த மறக் குலப்பெண்கள்
தாம் அவர்கள்.
அறிந்தோ அறியாமலோ இராணுவத்தினரை மணக்கும் பெண்கள் அவர்களது கணவரை விட பெரும் போர் நடத்துகிறார்கள்.
எல்லை பாதுகாப்புப் பணியில் ஒருவன் வீரமரணம் அடைய நேர்ந்தால் அவனது குடும்பத்தைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்.
இங்குதான் கர்னல் கணேசன் தடம் பதித்தார் .
இராணுவப் பணி பெரும்பாலும் ஒரு கூட்டு முயற்சி. அதில் ஒருவன் உயிர்த் தியாகம் செய்யநேர்ந்தால் அவனது செயல் பலராலும் பாராட்டப்பட்டு
அவனது ஈமச் சடங்குகள் மரியாதையுடன் செய்யப்படுகிறது.
அனால் ஒரு சில நாட்கள் சென்று அவனது மனைவி மக்களைப் பார்த்தோமானால் அது விவரிக்க முடியாத சோகக் கதையாக இருக்கும்.
கணேசன் அந்த சோகக் கதைகள் தொடரக் கூடாது என்று முடிவெடுத்தார்.
அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்குள்ளான பெண்களை
Un Known Soldiers
என்று அறிமுகப்படுத்தினார். இராணுவத்தினரின் குடும்பமே அறியப்படாத வீரர்கள் என்று பிரகடனப் படுத்தினார் .
இராணுவத்தினரை மணக்கும் பெண்களைக் கௌரவிக்கும் ஒரு நிகழ்வாக இந்த விழா 1981-82ல் நிகழ்த்தப்பட்டு படைப்பிரிவு தளங்களில் கணவரோடு
வசிக்கும் அவர்கள் ஒவொருவரும் முன்னிறுத்தப்பட்டு கௌரவிக்கப் பட்டர்கள்.
1981-2ல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் என்ற இடத்தில் நடத்திய UN KNOWN SOLDIERS DAY நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள்.
அன்றய படைப்பிரிவு தலைவர் COLONEL.B.S.Guraya (டர்பன் கட்டியிருப்பவர் ) அவர்களின் இரு புறமும் கர்னல் கணேசனும் அவரது துணைவியாரும்.
இன்று சுமார் 37 வருடங்களாகத் தொடர்கிறது அந்த விழா.
அடுத்து கணேசன் அறிமுகப்படுத்தியது
FAREWELL NOT GOODBYE
இது பற்றிய விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968