ஓய்வும் உறக்கமும் உள்ள இடத்திற்குப் போர்க்களம்
என்று பெயரில்லை.
போரின் முடிவுகள் ஓரிரு நாட்களில் ஏற்படுவன அல்ல. போரின் பல நிலைகளைப் பல உதாரணங்களுடன் விளக்கலாம்.
உதாரணமாகச் சில தெரு நாய்கள் சண்டைக்குத் தயாராவதைக் கூர்ந்து கவனியுங்கள். ஆரம்ப அறிகுறி, மோதல், ஒன்றுக்கொன்று விட்டுக்
கொடுக்காத இழுபறி நிலை, வெற்றி தோல்வியின் அறிகுறி, பின்னர் ஒன்றை மற்றொன்று விரட்டியடிப்பது;.
கயிறு இழுக்கும் போட்டியில் ஒரு அணி மற்ற அணியை இழுத்து வெற்றி இலக்கைத் தொட்டு விடக்கூடிய நிலையில், தோல்வியின்
விளிம்பிலிருந்த அணி ஒரே மூச்சில் மற்ற அணியை இழுத்து வெற்றிக் கனியைப் பறிப்பது புதிது அல்ல. காலம் காலமாக நடந்துவரும்
நடைமுறைகள்தான் அதே சமயம் கயிறு இழுக்கும் போட்டியாகட்டும்; தெருநாய்ச் சண்சயாகட்டும் எளிதில் வெற்றிபெற எவரும் விட்டுக்
கொடுத்து விடுவதில்லை. இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்றுதான் இரு அணிகளும் முயற்சி செய்கின்றன. ஏராளமான
ஆயுதங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நிமிடத்திற்கு நிமிடம் நடக்கக் கூடிய இடம் போர்க்களம். ஆகையினால் அங்கே ஓய்வெடுத்துக்
கொள்ளலாம் என்றோ சற்று உறங்கிவிட்டுப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றோ யாரும் கருதக் கூடாது. ஓய்வு - உறக்கம் என்பதற்கே
அங்கே இடமில்லை. ஓய்வும் உறக்கமும் உள்ள இடத்திற்குப் போர்க்களம் என்று பெயரில்லை..
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794