Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வெள்ளி, 19 ஏப்ரல், 2013

எண்ணங்களே வாழ்க்கை

எண்ணங்களின் சுழற்சி குயவனின் சக்கரம்போல் சுழன்று

நம் ஆன்மீக ஆர்வம்தான் சிறிது சிறிதாக நம்மை

உருவாக்குகிறது.

எண்ணங்கள் புரட்சிகரமானவை; எண்ணங்கள் உணர்ச்சிகரமானவை; எண்ணங்கள்தான் உண்மையில் சூழ்நிலைகளை மாற்றியமைக்கின்றன. இப்படிச் சொல்லலாம். மனம் என்பது நிலம். எண்ணங்கள் விதைகள். விதைக்கிற விதைகளின் ரகத்திற்கும் திடத்திற்கும் தக்கபடியே பயிர் வளர்கிறது. செடி கொடி மரம் எதுவாயினும் விதைகளின் தரத்திற்கேற்பவே அமைகின்றன. மனதில் தோன்றும் எண்ணங்கள் உறுதியாக ஆக அன்றாடம் அதன் திடத்தன்மை வளர வளர நம் ஆளுமை வளர்கிறது. எண்ணங்களின் சுழற்சி குயவனின் சக்கரம் போல் சுழல்வது.

நம் ஆன்மீக ஆர்வம்தான் சிறிது சிறிதாக நம்மை உருவாக்குகின்றது. பிறகு எண்ணங்கள் வார்த்தைகளாக வெளிவருகின்றன. வார்த்தைகள் செயல் வடிவம் பெறுகின்றன, தொடர்ந்தாற்போன்ற செயல்கள் பழக்கமாகின்றன. பழக்கவழக்கங்கள் ஒருவனின் குணநலன்களை நிர்ணயிக்கின்றன. குணநலன்கள் அவன் தலை விதியை நிர்ணயிக்கின்றன. உங்கள் தலை விதியை நிர்ணயிப்பது உங்களைத் தவிர வேறு எவருமே இல்லை என்பதை உறுதியாக நம்புங்கள்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968