ஊடகங்கள் (News media) ஆரம்பிப்பதின் நோக்கம் உரிமையாளரின் கருத்துக்களை வெளி உலகிற்குத் தெரியப்படுத்துவதேயாகும்.
விளம்பரங்கள் மூலமாகவும் விநியோகம் பெருகும்போதும் பத்திகையாளர்கள் லாபம் சம்பாதிக்கிறார்கள்.
சமுதாய வளர்ச்சி, மாணவர்களின் மனப்போக்கை முன்னேற்றப்பாதையில் மாற்றி அமைக்கும் பொதுநலத்தொண்டு போன்ற நிகழ்வுகள் தனி மனிதர்களாலும்
சமூக அமைப்புகளாலும் அவ்வப்பொழுது நடத்தப்படுகின்றன. இவைகள் பற்றி ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினால் அவர்கள் அதை பொதுமக்களுக்குத் தெரியும் விதத்தில் பிரசுரிக்கவேண்டியது பத்திரிகை தர்மம்.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கர்னல் கணேசன் "தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற நோக்கில் தமிழ்நாட்டில் சன்னாநல்லூர்,
பேரளம் (இரண்டும் திருவாரூர் மாவட்டம்) சென்னை, மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் "அகத்தூண்டுதல் பூங்கா " (Inspirational Park ) அமைத்து மாணவர்கள் மத்தியில் உந்துசக்தி உரை நிகழ்த்தி வருகிறார்.
2012 ம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்வு ஐந்து ஆண்டுகளில் பலவித இடையூறுகளைத்தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறது
சன்னாநல்லூர் கர்னல் கணேசனின் பிறந்த ஊர் என்பதால் அங்கு அமைத்துள்ள "அகத்தூண்டுதல் பூங்கா " தனிக்கவணம் பெற்று ஒரு கலந்துரையாடல் மையம், ஒரு விண் ஈர்ப்பு நூலக அருங்காட்சியகம் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை -திருவாரூர் முக்கிய சாலையில் இடது பக்கமாக சன்னாநல்லூரின் எல்லையில் அமைத்துள்ள இந்த பூங்காவை சாலையில் பயணிக்கும் எவருமே கவனிக்காமலிருக்க முடியாது.
ஆனால் இத்தனை வருடங்களில் எந்த ஒரு பத்திரிகையும் இது பற்றி செய்திகள் வெளியிடவில்லை என்பது ஒரு வியப்பான உண்மை.
கர்னல் கணேசனை அணுகிய பல பத்திரிக்கையாளர்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் என்ற முதல் கேள்வியை முன்வைக்கிறார்கள். இளமை முழுவதும் இந்த நாட்டுக்கு வழங்கிவிட்டு
தனது சொந்த நிலத்தில் தனது ஓய்வூதியம் முழுவதும் செலவிட்டு இந்த சுற்றுப்புறங்களிலிருந்து ஒரு மா மனிதன் உருவாக பாடுபட்டுக்கொண்டிருக்கும் அவர் விளம்பரமா தேடுகிறார் ?
சமீபத்தில் சென்னை அண்ணாநகரில் இயங்கிவரும் ஒரு பத்திரிகை இதுபற்றி தெரிந்து குறைந்த பட்சமாக அண்ணாநகர் வாசிகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஒருகட்டுரை வெளியிட்டுளார்கள்.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் உலகெங்குமுள்ள சமூக ஆர்வளர்கள் கணேசனத்தெரிந்து கொள்ளவும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இதைப்படிக்கும் உலகெங்குமுள்ள சமூக ஆர்வளர்கள் கர்னல் கணேசனைதொடர்புகொண்டால் நாம் "ஊர்கூடித் தேரிழுக்கலாம் "
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794