மனிதஉடலின் தலைமைச்செயலகமாக இயங்கும் மூளையின் செயல்பாடுகள் இவ்வளவுதான் என்று எந்த
வல்லுநர்களாலும் வரையறுத்துச் சொல்லமுடிவதில்லை.இயக்குபவன் எந்த அளவுக்கு உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் விதத்தில்
கட்டளை இடுகிறானோ அந்த அளவு அவனது செயல்கள் வெற்றிபெறுகின்றன.
உடலின் இயக்கத்தைப் பற்றியும் அதில் இயங்கும் உயிரின் ஆளுமையைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஒருவன் தன்னைத்தான்
படிக்கவெண்டுமேயொழிய அந்த அறிவைப்பெற வெளியில் தேடவேண்டிய அவசியமில்லை.
பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவியரின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? அறிவாளியாக ஆகவேண்டும் என்பதா?.
அறிவு என்பது வெளியில் தேடுவதில்லை.அது ஒரு ஆன்ம உணர்வு.அது தன்னுள்ளேயே கிளர்ந்து எழவேண்டும்.
குழந்தையின் ஏழு வயதிற்குள் மூளை முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறது.அதன்பிறகு அக்குழந்தையின் செயலாக்கம் அது எந்த அளவுக்கு
மூளையை உபயோகப்படுத்துகிறதோ அதைப்போருத்தே அந்த செயல் சிறக்கிறது.
உளவியல் வல்லுநர்களும் மூளை ஆராயிச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களும் வியக்கத்தக்க ஆய்வுகளை எழுதிவருகின்றனர்.
A harmonious association of powers,simultaneous and quick concentration of all sences leads
to success unknown to history.என்கிறார்கள்.
அதாவது ஒரு மனிதன் தனது ஐம்பொறிகளின் செயல்பாட்டையும் ஒருங்கிணைத்து சூரிய ஒளியை ஒருங்கிணைத்துப் பாய்ச்சும்
குவிக்கண்ணாடியைப்போல் ஒரு செயலில் ஈடுபடுத்தும்போது அந்த செயல் கற்பனைக்கும் எட்டாத அளவு வெற்றிபெறுகிறது.
தானே தனக்கு உந்து சக்தியாகவும் ,முயற்சி,தீவிர முயற்சி,விடா முயற்சி என்று தொடர்ந்து செயல்படும் ஒருவன் சரித்திரம் படைக்கிறான் என்பதுதான் உண்மை.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794