` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


திங்கள், 22 அக்டோபர், 2018

கை விலங்கல்ல

வியாபாரிகளாக வந்த ஆங்கிலேயர்கள் இப்புண்ணிய பாரதத்தின் பரந்த வெளியில் மாறுபட்ட சமூகச் சூழ்நிலையுடன் பலதரப்பட்ட மக்கள் வாழ்வதைக் கண்டனர். ஆரம்ப காலத்த்தில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட சில காவலர்களே இந்திய இராணுவ அமைப்பிற்கு ஆதாரமானது.



ஆனால் இவர்களது வருகைக்குப் பல நூற்றாண்டுகள் முன்பே இந்திய மாமன்னர்கள் திரைகடல் தாண்டி போரிட்டு வென்றிருக்கின்றனர். மஹாபாரதத்தில் கௌரவர்கள் அமைத்த சக்ர வியூயூகத்தை உடைத்து மாவீரன் அபிமன்யு வெளி வரமுடியாமல் கொல்லப்பட்ட கதை நாம் அறிந்ததே. படைநடத்திச்சென்று பகைவர்களை வென்றது நமது பழங்கதையாக இருந்தாலும் இராணுவ அமைப்பிற்கு நவீன யுக்திகளைக்கொண்டு சட்ட திட்டங்களைத் தீட்டியது ஆங்கிலேயர்கள்தான் என்பதை மறுக்க முடியாது.இந்தியாவிலிருந்த சுமார் 565 இராஜ வம்சத்தினர் ஒவ்வொரு சமஸ்தானத்திற்கும் தனிப்பட்ட இராணுவ விதிமுறைகளைக் கொண்டிருந்தனர்.ஒவ்வொரு ராஜ வம்சத்தையும் சாம,பேத ,தான,தாண்ட முறைகளை பயன்படுத்தி ஒழித்துக்கட்டி ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியவர்கள் என்ற பெருமை நிச்சயம் ஆங்கிலேயர்களுக்கே உரியதாகும்.
இந்திய இராணுவத்திற்கான இராணுவ சட்டம் 1911 ல் உருவாக்கப்பட்டது.இந்திய தரப்படைகளுக்கு இந்தியர்களே அதிகாரிகளாக இருக்கவேண்டும் என்ற போராட்டத்தை முன் நிலைப்படுத்தியவர் இராஜாராம் மோகன்ராய் என்ற சுதந்திர போராட்ட வீரர்தான்.இதுவே பிற்காலத்தில் KINGS COMMISSION என்ற இந்திய அதிகாரிகள் அமைப்பாகவும் சிறந்த மாணவர்களில் சிலர் ஆங்கிலேயர்களின் இராணுவக் கல்லூரியில் பயிலவும் வாய்ப்பாக அமைந்தது.



இராணுவ சட்டங்களும் (Army Act )சட்ட ஒழுங்கு முறைகளும் (Army Rules ) பல விதமான மாற்றங்கள் பெற்று இந்தியத் திருநாட்டின் பாரம்பரிய பெருமைக்கும் புகழுக்கும் ஏற்ற விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது.
இந்திய இராணுவ அமைப்பு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்றது என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.இதில் சேருபவர்கள் தங்களுடைய சொந்த விருப்பத்தின் காரணமாகவே தேர்வுக்கு வருகின்றனர்.ஆரம்பத்தில் பல விதமானக் கனவுகளுடன் இராணுவத்தில் சேரும் இவர்கள் ஒரு சில நாட்களுக்குள் தங்களது பணி தங்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லை என்பதை உணர்கின்றனர்.இதன் காரணமாகவே சிலர் பயிற்சி தளங்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய்விடுவது. இப்படி ஓடிப்போவது ஒரு குற்றம் என்பதால் விருப்பம் இல்லாவிட்டாலும் சிலர் வெறுப்போடு தங்களது இராணுவப்பணியைத் தொடர்கின்றனர்.
அவர்கள் இராணுவ சட்ட திட்டங்கள் "கை விலங்கு" போன்றது என்று உணர்கிறார்கள்.இப்படி விருப்பமில்லாமல் பணியில் தொடர்வதால் அவர்களால் எதையும் சிறப்பாகச் செய்ய முடிவதில்லை.பல ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றினாலும் உயர்வானப் பதவிகளையோ வாழ்க்கை நிலையையோ இவர்கள் அடைய முடிவதில்லை.
பயிற்சி காலத்தில் அதிகாரிகளானாலும், அதிகாரிகளல்லா தோரானாலும் பல விதமான மனப் போராட்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மை.இளம் வயதில் (சிப்பாய் யானால் 17-18 வயது ) அதிகாரிகளானால் (20-21 வயது ) பெற்றோரைப்பிரிவது,சொந்த ஊரைப்பிரிவது தனிப்பட்ட சுதந்திரத்தை இழப்பது, (அதாவது,விருப்பம்போல் இருப்பது ) போன்ற பல காரணங்களினால் பயிற்சி காலங்களில் சிலர் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் சிலர் சினிமா,தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் மூலமாக ஒரு கற்பனையான இராணுவ வாழ்வை தங்களுக்குள் உருவாக்கியிருப்பார்கள்.நடைமுறை வாழ்க்கை அப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து மாறுபடும்போது வாழ்க்கை ஏமாற்றமாக-போராட்டமாக மாறுகிறது.



இதுபோன்ற பயிற்சி தளங்களில் நல்ல அனுபவம் மிக்க உளவியலறிந்த நல்ல பழக்க வழக்கங்களுடைய அதிகாரிகள் பயிற்சி யாளராக வரும்போது அங்கு பயிற்றுவிக்கப்படும் மாணவர்கள் வாழ்வில் ஒரு புதிய ஒளி பிறக்கிறது.ஒரு மாணவன் உடல் நிலை சரியில்லை என்று sick report செய்கிறான் என்றால் அவன் ஓரிரு நாட்களில் குணமடைய வேண்டும்.ஆனால் உடலில் காயமில்லாமல் அவன் தொடர்ந்து sick report செய்துகொண்டிருப்பானேயானால் அதைக் கவனத்தில் கொண்டு அந்த மாணவனை ஒரு உயர் அதிகாரி நேர்காணல் செய்யவேண்டியது மிகவும் அவசியம்.ஏனெனில் நோய் அவனது உடலில் இல்லை என்பதையும் மனதில்தான் என்பதையும் அதிகாரிகள் உணரவேண்டும்.
அப்படிப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சி தரும்போது அங்கு புதியதோர் சமுதாயம் உருவாகிறது.அப்பொழுது அதே மாணவர்கள் யார் இராணுவ சட்ட திட்டங்கள் ஒரு "கை விலங்கு "என்று எண்ணினார்களோ அவர்களே "இல்லை ;இது ஒரு கைப்பிடிச் சுவர் "என்பதை உணர்வார்கள்.
வழியறியா எல்லைப்புறங்களில் மொழியறியா மாநிலங்களில் இயற்கைக்கு கொடுமைகளுக்கும்,எதிரிகளுக்கும் ஈடு கொடுத்துப்போராடும் இராணுவத்தினருக்கு ஆரம்பகாலப் பயிற்சிகள் ஒரு கைப்பிடிச்சுவர் போன்று வழிகாட்டியாக,உறு துணையாகஇருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
சுமார் 30 ஆண்டு கால இராணுவ அனுபவத்தில் கர்னல் பாவாடை கணேசன் அவர்கள் மூன்று ஆண்டுகள் இளம் அதிகாரிகளுக்குப் பயிற்சி அதிகாரியாகவும் ஆறு ஆண்டுகள் அதிகாரிகளல்லாதோருக்குப் பயிற்சி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.1965 ல் நடந்த இந்திய- பாகிஸ்தானிய போரில் Sialkot sector ல் போர்முனைப் பயிச்சியும் 1971 ல் அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் "பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடாக உருவானப் போரிலும் நேரடிப் பங்கு கொண்டவர்.



இராணுவப் பயிற்சி தளங்களில் பணியாற்றுகையில் சிறந்த விளையாட்டு வீரராக Atheletics,Basketball Swimming ஆகிய மூன்று பிரிவுகளில் பரிசு பெற்றவர்.பொறியாளர் படைப்பிரிவு ஒன்றை தலைமை ஏற்று முதலில் அருணாச்சலப் பிரதேசத்திலும் பின்னர் ஜம்மு காஷ்மீரிலும் பணியாற்றிக் கொண்டிருக்கையில் மூன்று வருட முடிவில் இப் புண்ணிய பாரதத்தின் தென் துருவ ஆராய்ச்சித்தளமான "தக்ஷிணகங்கோத்ரி "யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் அந்தப் பனிப் பாலைவனமும் உலகிலேக் கொடுமையானக் குளிரும் பனி க் காற்றும்கொண்ட "அண்டார்க்டிக்காவில் "பணியாற்றி குடியரசு தலைவரின் "வசிஷ்ட சேவா மெடல் " விருதுபெற்றவர்.
அவரது அனுபவத்தில் இராணுவப் பணி ஒரு மகத்தான சேவை என்றும் அந்த வாழ்க்கை ஒரு பொற்காலம் என்றும் நினைவுகூர்கிறார். அவர் அறிந்து கொண்டது தான் "இராணுவ சட்ட திட்டங்கள் "கை விலங்கல்ல ;கைப்பிடிச்சுவர் "என்பது.இந்த நோக்கத்தில் அவரது இலக்கியச் சோலையில் பூத்த நறுமலர் தான் அதே தலைப்பில் உருவான இந்த நூல். சுமார் 100 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் உப தலைப்புகள் ;
1.இந்திய இராணுவ அமைப்பு .
2.அதிகாரிகள் சேர்ப்பு முறை.
3.அதிகாரிகளல்லாதோர் சேர்ப்பு முறை.
4.குற்றங்களும் தண்டனைகளும்.
5. விசாரணை முறைகள்.
6.நீதி வழங்குதல்;மேல் முறையீடுகள்.
7.இராணுவ அமைப்பிலிருந்து தன் விருப்ப விலகல்;ஒய்வு.
8.முன்னாள் இராணுவத்தினர் அமைப்பு.;
9.இராணுவத் சலுகைகளும் அதைப் பெறும் முறைகளும்.
10.இடைக்காலப் பிரிவேயன்றி இறுதி வணக்கமல்ல.
இராணுவத்தில் சேர விருப்பமுடையவர்கள்,ஆரம்பகால இராணுவத்தினர்,மற்றும் இராணுவ சட்ட திட்டங்கள் பற்றி சரியான விளக்கம் பெற விரும்புவோர் ஆகியவர்களுக்கு மிகவும் உபயோகமானது இந்த நூல் தேவைகளை பொறுத்தே அச்சில் ஏற்றப்படும்
விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்க:
கர்னல் பா .கணேசன்.
செல்: 9444063794,9884060671

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968