Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வெள்ளி, 29 ஏப்ரல், 2016

28. தெளிவான கட்டளை.

28. தெளிவான கட்டளை.
கட்டளை இடுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.ஏனெனில் எண்ணங்கள் என்பவை தனி ஒருவருக்குச் சொந்தமானவை.செயலாக்கத்திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது.என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கட்டளையாக இருக்கவெண்டுமேயொழிய எப்படிச் செய்யவேண்டும் என்பது கட்டளையாக இருக்கக் கூடாது. சில சமயம் வீரர்கள் தலைவன் எதிர் பார்த்ததைவிட சிறப்பாக செயலாற்ற முடியும்.ஒரு சமயம் நல்ல தலைவனின் அணுகுமுறை மாறுபடலாம். கட்டளை இடுவதோடு அதை எப்படி செயலாற்றுவீர்கள் என்று ஒரு செயல் விளக்கம் கேட்டு எண்ணங்களைப் பறிமாறிக்கொள்ளலாம்.முடிவில் சிறந்த செயலாக்க முறையை செயல் படுத்தலாம். இராணுவத்தின் செயலாக்க முறைகளில் வெற்றி என்பது ஒரு கூட்டு முயற்சியாக இருக்கவேண்டும்.

27. தலைமைத் தகுதிக்குத் தயாராகுங்கள்.

கல்லுரிப் பட்ட்ங்கள் பெற்றிருந்தாலும், பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்திருந்தாலும் செயலுரிமைக்கட்டளைப் பெற்றிருந்தாலும் தலைமைத்தகுதிக்கு நீங்கள் ஏற்றவர்தானா? கேளுங்கள் உங்கள் மனசாட்சியை. அது பதில் சொல்லும். இராணுவம் என்ற பணி மற்ற பணிகளைப் போல் யந்திரங்களுடனும் காகிதங்களுடனும் கண்க்குவிகிதங்களுடனும் ஈடுபட்டு வெற்றி காணும் பணி அல்ல.அங்கு மனித்ர்களோடு, அவர்களது மனமுவந்த உயிர்த்தியாகத்தோடு போராடும் தலைவன் தேவைப்படுகிறான்.கையில் பிரம்புடன் துருப்புகளின் பின்னின்று விரட்டுபவனைவிட மனதில் தைரியத்துடன் முன்னின்று வழி நடத்தும் தலைவனையே இராணுவம் விரும்பி எற்றுக்கொள்ளுகிறது. சத்திய எண்ணங்கள், எண்ணங்களை செயலாக்கத்திறன் என்ற வாள்கொண்டு வீசும் வீரனைத் தலைமைத் தகுதி தேடிவந்தடைகிறது.

26.பட்டப் படிப்பும் பழக்க வழக்கங்களும்.

அறிவுத்திறன் எல்லாமே கல்விச்சாலையில் பெறப்படுவதில்லை.கல்விச்சாலையில் பெறும் பட்டங்கள் வாழ்வின் வெற்றிக்கு முழு காரணங்கள் ஆவதில்லை.வகுப்பறையிலும் பல செயல்முறை விளக்கக் கூடங்களிலும் பெறமுடியாத அறிவுத்திறனை சுற்றுப்புற சூழ்னிலையால்,வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் மூலம் பெறமுடியும்.அப்படிப்பட்ட அறிவாற்றல் கல்வித்தகுதி என்ற சானைக்கல்லினால் கூர்மைப்படுத்தப்படுகிறது.அதை மனதில் கொண்டால் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சிகள்,சந்திக்கும் மனிதர்கள் ஏதோ ஒரு அறிவுத்திறனை போதிக்கின்றனர் என்று புரிந்துகொள்ளலாம். தற்பொழுது பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்கள் அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.காரணம் வழங்கப்பட்டது வெறும் பட்டம்தானே தவிர வாழ்க்கைக்கான உத்திரவாதம் அல்ல என்று உள்ளூர அவர்கள் உணர்ந்திருக்கிரார்கள்.அறிவுத்திறன் ஒவ்வொரு நாளிளும்.ஒவ்வொரு நிகழ்விலும் ஒளீந்திருக்கிறது. கண்டுபிடித்தால் நீங்கள் வெல்வது சுலபம்

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968