` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


செவ்வாய், 31 அக்டோபர், 2017

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழிதானே மந்திரம் என்ப ...

திருமூலர் அருளிய திருமந்திரம் ஆழ்ந்த அறிவுபெற்ற தமிழறிஞர்களல்லாமல் சாதாரண மனிதர்களால் சுலபமாகப் புறிந்துகொள்ள முடியாது.
அது யந்திரம், தந்திரம், மற்றும் மந்திரம் ஆகிய மூன்றையும் பற்றிய நூல். திருமூலர் ஒரு சித்தர் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். சித்தர்களின் மொழி மர்மம் நிறைந்தது. அவர்களது பாடல்களை புரிந்துகொள்ள மொழி அறிவு மட்டுமே போதுமானதன்று. சிறந்த மொழிப்புலமையும் ஆன்மீகப் பயிற்சியும் சித்தர்கள் தொடர்பும் பெற்றிருக்கவேண்டும்.

வழுதலை வித்திட பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண்டோடினார் தோட்டத்துக்குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக்கனியே .

இந்த பாடலுக்கு நேரான பொருள், கத்தரிக்காயை விதைத்தேன், பாகற்காய் முளைத்தது. புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது, இதைக்கண்டு தோட்டத்துக் குடிகள் தொழுது ஓடினர், வாழைக்கனி பழுத்தது என்பதாம்.

ஆனால் உண்மையான பொருள்;
வழுதலை வித்திட -யோகப்பயிற்சி செய்ய
பாகல் முளைத்தது-வைராக்கியம் தோன்றியது.
புழுதியைத்தோண்டினேன் -தத்துவ ஆராய்ச்சி செய்தேன்
பூசணி பூத்தது-சிவத்தன்மை எய்தியது
தோட்டத்துக்கு குடிகள்-இந்திரியங்கள் முதலியன
தொழுது கொண்டோடினர் -அச்சிவத்தன்மை கண்டு அஞ்சி அகன்றனர்
வழைக்கனி -ஆன்ம லாபம்
முழுதும் பழுத்தது-முழுதும் முற்றிக் கனிந்தது.

திருமந்திரம் ஒரு அற்புதமான நூல். பல பேரறிஞர்கள் இதற்கு விளக்கவுரை எழுதியிருந்தாலும் ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரிய முறையில் இடைச்செருகளும் விளக்கமும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பேராசிரியர் டாக்டர் சுப.அண்ணாமலை அவர்கள் சுமார் பதினேழு புகழ்பெற்ற பதிப்பகங்களின் நூல்களை ஒப்பாய்வு செய்து இந்திய பண்பாடு-ஆராய்ச்சி நிறுவனத்திற்காக 1997 ல் வெளிவந்த பதிப்பு ஒரு மாபெரும் பொக்கிஷமானது.
சென்ற சுமார் 25 ஆண்டுகளாக பலமுறை நான் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

4 Engineer Regiment என்ற பொறியாளர் படைப்பிரிவின் தலைவராக கர்னல் கணேசன் அருணாச்சலப்பிரதேச தவாங்கில்.
ஒரு இராணுவ அதிகாரியாக இரண்டு போர் களங்களைக்கண்டிருந்தாலும் சிறு வயது முதலே தீராத தமிழார்வத்தால் திருமந்திரம்,திருவாசகம், திருஅருட்பா, போன்ற நூல்கள் சிறிதும் பெரிதுமாக எப்பொழுதும் என் வசமிருக்கும்.
அந்த நூல்களின் தாக்கமே என்னை வழிநடத்துகிறது என்றால் மிகையில்லை.
மனித வாழ்க்கை ஒரு ஒப்பற்ற பரிசு. பெரும்பாலானவர்கள் இதைச்சாரியாகப்புரிந்துகொள்வதில்லை. பிறந்தசூழ்நிலை, பெற்றோர்கள், சுற்றுப்புற வாழ்க்கை நிலை, இளமைக்கல்வி , வளரும் பருவ நண்பர்கள் போன்ற பலவிதமான காரணிகளால் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்டு அதனால் மனித வாழ்க்கைப்பற்றி சரியானப் புரிதல் இன்றி தடுமாறி, தடம் மாறி மாசுபட்டு மடிந்துபோகிறார்கள்.
மனிதர்கள் தங்களது மூடிய மனக்கதவுகளை திறக்க மறுப்பதால், திறக்க தெரியாதலால் ,திறக்க முயற்சிக்காததால் ஒரு இல்லாமை,இயலாமை,என்ற மாய உலகினைத் தங்களுக்குளாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள்.
ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு மறுபக்கம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
ஊக்குவித்தல், விடாமுயற்சி, இடைவிடாத உழைப்பு, வாழ்வில் ஏற்றுக்கொண்ட வேலை யில் மனம் ஒன்றிய ஈடுபாடுபோன்ற குணங்களைக்கொண்டவர்கள், உண்மையிலேயே மலைகளைப்புரட்டுகிறார்கள், கடலைத்தாண்டுகிறார்கள். நேரான சிந்தனையில் மனிதர்களின் இரு பக்க மூளையையும் உபயோகப்ப படுத்தப் படுவதில்லை. மாறுபட்ட சிந்தனைதான் மன க்கதவைத் திறக்க உதவுகிறது.

4 Engineer Regiment ன் தலைமையகம் டேங்கா என்ற இடம்
மாறுபட்ட கோண பரிசீலனையினால் சில மகத்தான மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிக்கொண்டு வாழ்வில் உயர்ந்தோர்கள் எண்ணற்றோர்.

Officers Mess,4 Engr Regt,Tenga.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968