Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வியாழன், 5 மே, 2016

seconds out of the ring.

( உதவியாளர்கள் வெளியேறுக )

மனித வாழ்க்கை ஒரு அற்புதமான அனுபவம்.அனுபவம் என்பது சுற்றுப்புறமும் சூழ்நிலையும் மனித இனத்தில் ஏற்படுத்தும் தாக்கம்தான். இரும்பின் மேல் விழும் சம்மட்டி அடியும் கண்ணாடியின் மேல் விழும் மேல் சம்மட்டி அடியும் ஒரேவிதமான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கமுடியாது. எப்படிப்பட்ட இயக்க சக்தி உங்களுக்குள்ளே இருக்கிறது என்பதைப் பொறுத்தே இந்த தாக்கம் இருக்கும்.

வலிமையான உடலும்,அதனுள்ளே வலிமையான மனமும் உள்ளவர்களின் செயல்பாடுகள் இந்த அனுபவம் என்ற சானைக்கல்லினால் கூர்மைப்படுத்தப்பட்டு அடுத்த நிகழ்வை திண்மையுடன் எதிர் நோக்குகிறது.

BOXING எனப்படும் குத்துச் சண்டை இராணுவத்தில் ஒரு போற்பயிர்ச்சியாகக் கருதப்படுகிறது. எதிரியைத தாக்கவும் அவனது தாக்குதலை சமாளிக்கவும இது ஒரு அற்புதமான பயிற்சியாகும்.

இந்தப் போட்டியில் போட்டியாளர்களும் அவர்களது உதவியாளர்களும் Boxing ring உள்ளே நுழைந்து போட்டியாரம்பிக்க சிறிதுநேரம் வரை ஊக்கம் கொடுத்தபின் நடுவர் seconds out of the Ring என்று ஆணை இட்டு போட்டியை ஆரம்பிப்பார்.

இப்பொழுது இரு போட்டியாளர்களும் நிற்பதுபோலவே நமது வாழ்க்கை இருக்கிறது.உதவியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில் இனி போட்டியாளர்கள்தான் அவர்களது தலைவிதியை நிர்ணயிக்க வேண்டும்.

இதுதான் மனித வாழ்க்கை.உற்றார் பெற்றோர் உறவுகள் நண்பர்கள் என்று எவ்வளவு இருந்தாலும் நாம்தான் நமது வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்.

தாமே தமக்கு சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதுயார் பாசம் ஆர்
என்ன மாயம் இவை போகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போம் ஆறு அமைமின் பொய் நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே.
திருவாசகம்-யாத்திரைப் பத்து.

Seconds out of the Ring என்பதுதான் வாழ்க்கைத் தத்துவம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968