` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 4 அக்டோபர், 2017

தனி ஒரு மனிதனும் அரசாங்கமும்.

இந்தியத்திருநாட்டில் எண்ணற்ற மாமனிதர்கள் ஜனித்து, வாழ்ந்து மரணித்திருக்கிறார்கள். சமுதாய வளர்ச்சியில் பல சரித்திர சின்னங்கள் மண்ணோடு மண்ணாகிப் போனதுபோல் பல மாமனிதர்களும் இன்றைய மக்கள் மனதிலிருந்து மறைந்து போய்விட்டார்கள்.
அரசாங்க தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இன்றைய இளைய சமுதாயத்தினர் தரும் சில பதில்கள் மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் வயது முதிர்ந்தவர்களிடம் ஏற்படுத்துகிறது என்று சொல்லத்தேவையில்லை.
அடுத்த இந்திய தென் துருவ ஆய்வுத்தளமான தக்ஷிண் கங்கோத்திரி யின் தலைவர் கர்னல் கணேசன் என்ற அறிவிப்பு அன்று தென்துருவ ஆய்வில் பங்கு கொண்டிருந்த ஐம்பத்திரெண்டு நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டவுடன் கணேசன் தனது சொந்த ஊரான சன்னாநல்லூருக்குப் போய் தான் பிறந்து வளர்ந்த அந்த நறுமணச்சகதியிலிருந்து ஒரு பிடி எடுத்து வைத்துக்கொண்டார்.
1987 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் நாள் புதன்கிழமை அவரது பாதங்கள் உலக உருண்டையின்கீழ்க்கோடியான தென் துருவத்தில் பதிந்தது. ஆய்வுத்தளபராமரிப்புப் பயிற்சிக்குப்பின் அவர் ஆய்வுத்தள தலைவராகப் பொறுப்பு ஏற்றார். பதினைந்து பேர்களடங்கிய தனது குழுவினருடன் தனது பிறந்த மண்ணை எடுத்துக்கொண்டு விண் ஈர்ப்பு மையத்தையும் தந்தையுடன் அன்னை செய்த தவம்போலும் என்று பெற்றோர்களையும் மனதில் கொண்டு ஆய்வதளத்தைச்சுற்றி தூவி தனது பணி தனக்கும் தனது குழுவினருக்கும் இந்தியதிருநாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டார்

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்

..............(.யாருடைய பாடல் என்பது உங்கள் கற்பனைக்கு) என்ற பாடலை மனதில் கொண்டு 480 நாட்கள் அந்த உறைபனி உலகில் பணியாற்றினார்.
இன்றளவும் இந்தியாவின் ஐய்ந்தாவது குளிகாலக்குழு என்ற அவர்களது பணி ஈடு இணையற்று காலமெனும் கல்வெட்டில்பதிக்கப்பட்டு ஒளி வீசிக்கொண்டிருக்கிறது .
அண்டார்க்டிக்காவுக்குப் புறப்படுமுன் எப்படி வித்தியாசமாக செயலாற்றினாரோ அதுபோலவே கணேசன் அந்த உறைபனிக் கண்டத்திலிருந்து திரும்புமுன் யாருமே கற்பனை செய்திராதவித்ததில் செயல் புரிந்தார்.
சுமார் ஐம்பது கோடி வருடங்களாக உறைபனியில் (5000 மீ கனம் ) கிடந்த கற்பாறைகள் நாலைந்து ஒவ்வொன்றும் ஒரு டன் எடையுள்ளது கப்பலில் ஏற்றி தமிழ் நாடு கொண்டுவந்தார்.
1994ம் வருட வாக்கில் ஒரு இராணுவ கர்னலின் ஓய் வூதியம் மிகவும் கேவலமாக இருந்தது. சுமார் பதினெட்டு வருடங்கள் 943,H Block .17 th Main Road, Annanagar Chennai 600 040 என்ற முகவரியில் அந்த கற்பாறைகள் கிடந்தன.
இராணுவ அதிகாரிகளின் ஒய்வுவூதியம் சற்றே மாறியபின் தனது அடுத்த கட்ட செயலை ஆரம்பித்தார் கணேசன். தமிழ்நாட்டில் எண்ணற்ற திறமைசாலிகளாக இளைஞர்கள் வழியறியாமல் தடுமாறி தடம்மாறிப் போகிறார்கள். அவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அறிவுத் திருக்கோவிலாக அகத்தூண்டுதல் பூங்கா அமைத்துள்ளார். இந்த அகத்தூண்டுதல் பூங்காக்களில் தான் தென்துருவத்திலிருந்து கொண்டுவந்த கற்பாறைகளை சுமார் பத்து அடி உயர கான்கிரீட் தூண்களின் மேல் நிறுத்தியுள்ளார்.
சன்னாநல்லூர் அவரது பிறந்த ஊர் என்பதால் அங்கு ஒரு கலந்துரையாடல் மையம், அருங்காட்சியகம் நூலகம் போன்றவைகளும் அமைத்துள்ளார்.
சென்ற ஆகஸ்ட்டு 28 ம் நாள் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஒரு நிகழ்வில் கணேசனைப்பாராட்டி மேலும் அரசாங்க சார்பில் அகத்தூண்டுதல் பூங்காவை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச்செல்ல உதவுவதாக வாக்களித்துள்ளார் .

மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் சொன்னதைச்செய்யும் செயல் வீரர் அவர்களிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் கணேசன்.
மயிலாடுதுறை-திருவாரூர் முக்கிய சாலையின் ஓரத்திலிருக்கும் அகத்தூண்டுதல் பூங்காவும் அமைச்சரின் வரவு நோக்கி பூத்திருக்கிறது.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968