` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


செவ்வாய், 3 ஜனவரி, 2023

விபத்தில் உணர்வுகளிழந்த கருப்புப்பூனை அதிரடிப்படை இராணுவ வீரர் பிரபாகரனுக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி வழங்கும் விழா.
25 டிசம்பர் 2022,ஞாயிற்றுக்கிழமை.
அகத்தூண்டுதல் பூங்கா வளாகம்,
சன்னாநல்லூர் .
விழா தலைமை .கலைமாமணி,பத்மஸ்ரீ கே.கேசவசாமி

இந்தியக் குடியரசு தலைவர்களிடம் ஏழுமுறை சிறப்பு விருது பெற்றவர்.
வாழ்த்துரை வழங்குவோர் ;

1. முனைவர் .அழகர் ராமானுஜம்,தலைவர்,வேதாத்ரி மகரிழி ஆஸ்ரமம்.
2. திரு.சுதர்சனம் ,மூத்த வழக்கறிஞர்.கோயமுத்தூர்
3. திரு .ஆர்.வேதாச்சலம் .காரைக்கால். நன்றியுரை; கர்னல் பாவாடை கணேசன்,வீ.எஸ்.எம்.
தலைவர் ,அகத்தூண்டுதல் பூங்கா,சன்னாநல்லூர். பகல் விருந்து ;13.30 மணி

வரவேற்புரை.:

வணக்கம்.!
இந்திய திருநாட்டின் பாதுகாப்பில் பங்கெடுக்க ,தன்னார்வத்துடன் தனது சொந்த ஊரான இராமநாதபுர மாவட்டத்துக்கு கிராமத்திலிருந்து புறப்பட்ட திரு பிரபாகரன் அவர்கள்,தூரதிர்ஷ்ட்டவசமாக தனது பணி க்காலம் முடியுமுன்பே விபத்தின் காரணமாக திரும்பிவிட்டார். முதுகெலும்பு பாதிக்கப்பட்டு ,இடுப்புக்குக்கீழே உணர்வுகளிழந்த அவருக்கு,சிறு உதவியாக மோட்டார் பொறுத்திய சக்கர நாற்காலி வழங்க இருக்கும் விழாவிற்கு வந்திருக்கும் பெருமை மிகு பண்பாளர்கள் எல்லோரையும் வருக வருக என வரவேற்கிறேன்.தன் முனைப்பாக இந்த விழாவிற்கு ஏற்பாடுசெய்திருக்கும் கர்னல் பாவாடை கணேசன் சார்பாகவும்,பாவாடை தெய்வானை குடும்பத்தினர் சார்பாகவும் உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

விழாவிற்கு தலைமை ஏற்க இசைந்து இங்கு வந்துள்ள பெருமை மிகு கலைமாமணி,பத்மஸ்ரீ திரு கேசவசமி அவர்களுக்கு வணக்கம் சொல்லி அவர்களை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன். பெறலாம் வேதாத்ரி மகரிஷி ஆஸ்ரம தலைவரும் 21 ம் நூற்றாண்டின் அறிவு ஜீவி என்று போற்றப்படும் மரிஷி வேதாத்ரி அவர்களின் கருத்துக்களை உலகேங்கும் பரப்பும் உன்னத பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவருமான முனைவர் திரு அழகர் ராமானுஜம் அவைகளுக்கு வணக்கம் சொல்லி அவர்களை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

இந்தியதிருநாட்டின் பாரம்பரிய பெருமையை உலகேங்கும் பரப்பிவிட்ட மாமனிதர்,தெய்வத்திரு இராமானுஜரின் அடிமையாகத் தன்னைப் பாவித்து "சுதர்சனம்" என்று பெற்றோர்கள் இட்ட பெயரை "இராமானுஜ தாசர் ? என்று மாற்றிக்கொண்டவரும், இந்திய இராணுவத்தினர் மீது பெரு மதிப்பும் மரியாதையும் கொண்டு அதில் சிறப்பாகப் பணியாற்றிய கர்னல் கணேசன் பால் ஈர்க்கப்பட்டு இந்த விழாவில் பங்குகொள்ளும் பொருட்டு கோயம்புத்தூரிலிருந்து இங்கு வந்துள்ள திரு சுதர்சன் அவைகளை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரப்பங்காற்றி இந்திய அரசின் தாமிரப்பத்திர விருது பெற்ற திரு ராஜன் அவர்களின் மகனும் பாண்டிச்சேரி மாநிலத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாகக் காரைக்கால் மாவட்டத்திலும் மிகச்சிறப்பாக அரசாங்கப் பணியாற்றிஒய்வு பெற்றபின்னரும் பல சமூக சேவையில் ஈடுபட்டுவரும் திரு வேதாச்சலம் அவர்களையும் அவரின் தூண்டுதல் காரணமாக இங்கு வருகை புரிந்திருக்கும் காரைக்கால் வட்டார பெருமக்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.திரு வேதாச்சலம் அவர்களை மேடைக்கு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்வமிருந்தும் தனது வருகையை உறுதி செய்யமுடியாமல் இருந்து பல வேலைகளையும் ஒதுக்கிவிட்டு இங்கு இன்று மகிழ்வோடு வந்திருக்கும் பெருமக்களை வணக்கத்துடன் வரவேற்கிறேன்.தனது முப்பதாண்டு இராணுவப் பணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகப் பணியாற்றிய கர்னல் கணேசனின் அழைப்பை ஏற்று தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துள்ள முன்னாள் இராணுவத்தினர் அனைவருக்கும் எனது வணக்கம்.

உலகின் கீழ்க்கோடியான தென் துருவத்தில் கர்னல் கணேசனுடன் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றி இன்றுவரை அவரது எல்லா செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் இன்று பெங்களூரிலிருந்து இங்கு வந்துள்ள கௌரவ கேப்டன் திரு ராஜன் அவர்களை அன்போடு வரவேற்கிறேன்.

உறவிற்கு உரம் கொடுத்து ,உறவும் நட்பும் இணைந்து திரு கணேசனின் குடும்பத் தினரின் பல நிகழ்வுகளிலும் எங்கிருந்தாலும் வந்து கலந்து கொள்ளும் திரு ராமநாதன்-காஞ்சனா தம்பதியினர்,திருமதி நப்பின்னை-வெங்கடேசன் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இந்த மண்ணின் மைந்தன் கர்னல் கணேசனுடன் இணைந்து அகத்தூண்டுதல் பூங்காவின் பல நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளும் சன்னாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் எல்லோருக்கும் எனது வணக்கம். உங்கள் எல்லோருடைய வரவும் இனிதாக இயற்கை துணைபுரிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் எனது வரவேற்பு உரையை நிறைவு செய்கிறேன்.வணக்கம். !

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968