Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 24 ஏப்ரல், 2013

சட்டப் புத்தகத்தைச் சகதியில் எறியுங்கள்

இராணுவ அதிகாரிகள் மாறி மாறி வரும் சட்ட

நுணுக்கங்களில் பிடிமானம் கிட்டாமல்

தங்கள் இயலாமைக்கு அல்லது தோல்விகளுக்கு

காரணம் கேட்கக் கூடாது.

சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் நிலவிய சூழ்நிலை, சமுதாயத் தேவைகளின் காரணமாக அடிப்படையில் உருவாக்கப்பட்டது. காலச் சூழ்நிலை மாறும்பொழுது சமுதாயத்தின் தேவைகளும் மாறுகின்றன. சட்டங்களும் மாற்றி அமைக்கப்படுகின்றன. இராணுவ அதிகாரிகள் மாறி மாறி வரும் சட்ட நுணுக்கங்களில் பிடிமானம் கிட்டாமல் தங்கள் இயலாமைக்கு அல்லது தோல்விகளுக்கு காரணம் தேடக் கூடாது. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்கள் அறிவுத் திறனை வலுப்படுத்திக் கொண்டு தங்கள் மனச் சாட்சிக்குத் துரோகம் இல்லாமல் செயலாற்ற வேண்டும்.

போர் முனையிலிருந்து ஓடிப்போய்விட்ட ஒரு வீரன் குற்ற விசாரணையின்போது, காரணம் கேட்ட அதிகாரிக்கு,, ”ஐயா, நான் ஓடிப் போனதற்குக் காரணம் என் இயற்கைக் குணமான பயம்; சிந்தித்து முடிவெடுக்காமல் அனிச்சைச் செயலால் ஏற்பட்டது” என்கிறார். அந்தப் பதிலைக் கேட்ட அதிகாரி அவனைப் பாராட்டி, மன்னித்து, ”அனிச்சைச் செயல்களை வெல்பவனே வீரனாகக் கருதப்படுகிறான். மீண்டும் இதுபோன்று அனிச்சைச் செயல்கள் உன்னை ஆள்வதைத் தடுக்க வேண்டும். நீ இறந்தாலும் அது போர்க்களமாக இருப்பதற்காகப் பெருமைப்படவேண்டும்” என்கிறார்.

அதிகாரம் இருக்கிறது; சட்டம் சொல்கிறது என்று அவனைத் தண்டிக்க முற்படவில்லை. கண்மூடித்தனமாகப் பழைய சட்டங்களைப் பின்பற்றுவது மனதைத் துருப்பிடிக்கச் செய்துவிடும்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968