` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


செவ்வாய், 19 ஜனவரி, 2021

மனம் ஒரு மாயக்கண்ணாடி -2

சில நாட்களுக்குமுன் எனது பதிவில் எனது தென்துருவ பயண நூலான ,"வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத்துளிகள் "பற்றி குறிப்பிட்டிருந்தேன்.1981 தொடங்கி இன்று வரை இந்தியாவின் அண்டாரக்டிக்கா பயணம் தொடர்கிறது.அதில் உங்கள் பயணம் எந்த விதத்தில் வித்தியாசமானது என்று நண்பர்கள் நினைக்கலாம்.ஆய்வுக்கட்டுரைகளிலும் வீர தீர விளையாட்டுகளிலும் ஆர்வம் உள்ள சிலர் எனது நூலின் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நீண்ட பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லவும் மற்றவர்களுக்கு இன்னும் சில நிகழ்வுகளை எடுத்துச் சொல்லவும் இந்த இரண்டாம் பகுதி.

அண்டார்க்டிகா ஒரு உறைபனி கண்டம்.14.5 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு 98.5% உருகவே உருகாத பனி யால் மூடப்பட்டது. ஒருசில மலை முகடுகள் மட்டுமே கோடைகாலத்தில் தெரியம்.குளிர்காலத்தில் அதுவும் மூடிவிடும் .ஆய்வுநடத்த விரும்பும் நாடு தங்களது ஆய்வின் நோக்கப்படி மலைப்பாங்கான இடத்திலோ அல்லது உறைந்த பனி மண்டலத்தின் மீதோ தங்களது ஆய்வுத்தளத்தை அமைக்கும்.இந்திய முதல் ஆய்வுத்தளமான "தக்ஷிணகங்கோத்ரி "உறைபணிமீது அமைக்கப்பட்டது.உறைபனி 5000மீ.கன முள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஆய்வுத்தளம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தினாலும்,வருடம் முழுவதும் வீசும் பனிக்காற்றின் தாக்கத்தினாலும் ஆய்வுத்தளம் கொஞ்சம் கொஞ்சமாக உறைபனியில் மூழ்கும். ஆய்வுத்தளம் கட்டி நான்கு வருடம் சென்றபிறகே 1987ம் ஆண்டு எங்களது ஐந்தாவது குளிகாலக் குழு பயணப்பட்டது.ஐந்துநட்சத்திர விடுதி போன்றது இந்திய ஆய்வுத்தளம் என்று சொல்லப்பட்டது. அண்டார்டிகா சென்று நாங்கள் ஆய்வுத்தளத்தைப் பார்த்தபோது எங்களது இரத்தம் உறைந்தது.





நாங்கள் எதிர்பார்த்துவந்த ஐந்து நட்சத்திர விடுதி எந்த நிமிடமும்உறைபனியில் மூழ்கி குளிர்காலக்குழு ஜீவசமாதி யாகும் நிலையில் இருந்தது.இந்நிலையில் ஒரு தலைவன் எப்படி செயல்படவேண்டும் ?

உயிர்காக்கும் பிழைக்கும் வழியாக Escape shaft வழியாக உள்ளேபோக ,வெளியே வர விளையாட்டுபோல ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்தோம்.



அவசரம் அவசரமாக ஹெலிகாப்டரிலிருந்து தள்ளிவிடப்பட்ட எரிபொருள் எந்தநிமிடமும் பனி யில் மூழ்கும் அபாயம்.இவைகளை மேடைபோல் பிளாட்பாரம் அமைத்து அதன் மேல் அ டுக்கவேண்டும்.



அண்டார்க்டிகாவின் குளிர்காலக்குழுவின் செயல்பாடுகள் இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் ஜீவ மரண போராட்டம் .இயற்கையை எதிரியாக நினைக்காமல் நண்பனாக ஏற்றுக்கொள்ளும்போது அது வேடிக்கை விளையாட்டுபோலாகிவிடும். நாங்கள் அப்படித்தான் விளையாடி மகிழ்ந்தோம்.எங்களது புகைப்படங்களும் வீடியோவும் அப்படித்தான் காட்டுகின்றன.ஓராண்டு முடிக்கையில் எங்களைப்போல் இன்றுவரை யாரும் Camp Fire கொண்டாடவில்லை.



அதுமட்டுமல்லாமல் வருடம் முழுவதும் ஆட்டமும் பாட்டமுமாக செலவிட்டாலும் எங்களது அரசுப்பணி மிகச்சிறப்பாக முடித்தோம்.இன்று சுமார் முப்பது வருடங்களாகியும் இன்றும் எங்களது குளிர்காலக் குழு உறுப்பினர்களில் காலதேவனின் மடியில் கலந்துவிட்ட இருவரைத்தவிர மீதி எல்லோரும் அவ்வப்பொழுது கலந்துரையாடுகிறோம்.அதுவே எங்களது வெற்றி.அதுவே இன்றைய இளைஞர்களுக்கு எங்களது செய்தி.

வாழ்த்துக்களுடன்!!

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968