Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வெள்ளி, 5 ஏப்ரல், 2013

வெற்றி ஒரு சிகரம் என்றால் அதன் வாயில்கள் எங்கே ?

வெற்றிச் சிகரத்தின் வாயில்களை அடைய நடக்கும் பயணத்தின் அனுபவம் என்ன ? அது தோல்வியாகத்தானே இருக்க வேண்டும் ?

தோல்வி என்ற சொல் நமது வாழ்க்கை வேள்விக்குப் பொருளற்றதாகும். தோல்வி என்பவை எல்லாம் தோல்விகளே அல்ல. அவைகள் எல்லாமே வெற்றிக்குப் போடப்பட்ட படிக்கட்டுக்களே. வாழ்வில் பலரும் பல வழிகளில் வெட்கப்படத்தக்க வெற்றிகளை அடைகிறார்கள். வெட்கப்படத்தக்க வெற்றி வாழ்க்கையின் இறுதிவரை மனசிற்குள் தீராத உறுத்தலையே தரும். வெளியே நம்மைப் போற்றிப் புகழ்பவர்களாகத் தோற்றமளிப்போர் நம்மை விட்டுக் கிளம்பியதும் தூற்றியே தீருவர். அதே போல் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்கும் சிலர் பெருமைப்படத்தக்க தோல்விகளைக்கூட அடையலாம். ஆனால், அந்தத் தோல்வி கம்பீரமாகவே கருதப்படும்; போற்றப்படும். இராணுவ வாழ்க்கையில் வெற்றி பெறும்போது பொங்கி மகிழ்வதும் தோல்விகளைக் கண்டு அதிர்ந்து வருந்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

வெற்றி ஒரு சிகரம் என்றால் அதன் வாயில்கள் எங்கே ? அதை அடைய நடக்கும் பயணத்தின் அனுபவம் என்ன ? அது தோல்வியாகத்தானே இருக்க வேண்டும் ? வெற்றியின் சிகரத்தை எட்டப் பயணம் புறப்பட்டோர் தோல்விகள் என்ற படிக்கட்டுக்களைக் கண்டு மயங்கிச் சோர்ந்துவிட்டால்,, சிகரத்தை எட்டுவது எப்படி ? இராணுவத்தினராகிய நம்மிடையே தோல்வியைக் கண்டு சோர்ந்துவிடும் சின்னமே இருக்கலாகாது. இன்றையத் தோல்வி. அதோ நாளை காத்திருக்கிறது வெற்றிச் சிகரத்தின் வாயிலைத் திறந்து வைத்துக் கொண்டு என்று துவளாமல் முன்னேறுவோம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968