Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


திங்கள், 22 ஏப்ரல், 2013

எதிர்மறை எண்ணங்களுக்கு எதிர்ப்பு !

முரண்பாடான சிந்தனை போன்றவற்றால் மனிதன்

தனக்குள் தானே பேசிக் கொள்கிறான். அந்தப்

போராட்டத்திற்கு ஓய்வே இல்லை.

இரு படைகள் மோதும் களத்தைப் போர்க்களம் என்பார்கள். தனி மனிதர்கள் வாழ்விலும் அன்றாடம் ஓர் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எதிர்மறை உணர்வுகள் - எண்ண ஓட்டங்கள் - முரண்பாடான சிந்தனைகள் போன்றவற்றால், மனிதன் தனக்குள் தானே போரிட்டுக் கொள்கிறான். அந்தப் போராட்டத்தீற்கு ஓய்வே இல்லை. மனித உள்ளத்தைக் கட்டுப்படுத்தாமல் கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்மறை எண்ணங்கள் வலுத்து வெளிப்பட்டுp பெரிய போராக வெடிக்கிறது.

தாய் நாட்டின் பாதுகாப்புப்படையில் பணியேற்றுள்ள நீங்கள் பணிக்காலத்தில் உங்ளுக்குள்ளேயே ஒரு போர்க்களம் உருவாக அனுமதிக்கக்கூடாது. முரண்பாடான எண்ணம் ஒன்று தோன்றிய உடனேயே, எதிரியை மடக்குவது போல நாம் ஏற்றுள்ள பாதுகாப்புப் பணியை நினைவு கொண்டு உடனே நம் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். மக்களின் ஒட்டு மொத்தத் தொகுதியின் சின்னமே அரசாங்கம்; அதன் கொள்கைகளில் மதிப்பும் மரியாதையும் வையுங்கள்

அரசாங்கத்தின் குறியீடுதான் தலைவன் அவனது தகுதியிலும் திறமையிலும் நம்பிக்கை கொண்டு, அவன் இடும் ஆணைகளுக்கு முழுமனதோடு உங்களது திறமை எல்லாவற்றையும் தந்து செயல்வடிவம் தாருங்கள்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968