` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 10 ஜனவரி, 2018

சக்கரம் சுழல்கின்றது.... அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது....

பொதுப்பணித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த கணேசன் 1964 ம் ஆண்டு May 03 ம் நாள் இராணுவத்தில் அதிகாரியாக மாற்றம் பெற்றார். 44 Field Park Company என்ற படைப்பிரிவில் பணி தொடங்கியபின் அது 4 Engineer Regiment என்று 02 june 1966 அன்று உரு மாற்றம்பெற்றது.
காலமெனும் காட்டாறு கரைபுரண்டோடியது. 1965 ல் பாகிஸ்தானுடனான போர், பின்னர் 1971ல் பங்களாதேஷ் தனி நாடான போர் என்றும் அதே படைப்பிரிவுடன் பணியாற்றிய கணேசன் 1969ல் தனது பொதுப்பணித்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு இராணுவத்தில் நிரந்தர அதிகாரியானார்.
பலமுறை இதே படைப்பிரிவுடன் பணியாற்றிய கணேசன் 1984 ம் ஆண்டு இந்த 4 Engineer Regiment ன் தலைவரானார். அவருடைய மூன்றாண்டு தலைமையில் பல இளம் அதிகாரிகள் படைப்பிரிவில் சேர்ந்தார்கள். அதில் ஒருவர் 2 L/t M N Devaya.
இராணுவப் பொறியியற்கல்லூரியில் இளம் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் அதிகாரியாகப் பணியாற்றியிருந்த கணேசன் தன்னுடைய தலைமையின் கீழ் பணியாற்றும் ஒவொரு அதிகாரியையும் வருங்கால ஜெனெரல் ஆபீசர் என்றே நடத்தியிருக்கிறார்.

அன்றய கர்னல் கணேசன் மற்றும் தேவையா
காலம் உருண்டோட கணேசன் 1994 ம் ஆண்டு பணி ஒய்வு பெற்றார்.
அவரிடம் பணியாற்றியவர்கள் காலப்போக்கில் உயர்ந்து பல நிலைகளில் ஒய்வு பெற்றார்கள்.
இந்நிலையில் கணேசனுடைய மூத்த மகனும் இராணுவத்தில் அதிகாரியாகி அதே 4 Engineer Regiment ல் பணியாற்றி தற்பொழுது Lt Colonel என்ற பதவியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
தங்களது மகனுடைய குடும்பத்துடன் சில நாட்கள் செலவிட பயணித்த கணேசனுக்கு ஒரு ஆச்சரியமும் அதிசயமும் அங்கு காத்திருந்தது. ஆம்.
அன்று அவர் தலைவராக இருந்த படைப்பிரிவு அருகிலேயே தான் அவருடைய மகன் ஆனால் வேறொரு இடத்தில் பணியாற்றுகிறார். இதில் பெரு மகிழ்ச்சி என்னவென்றால் அன்று அவரிடம் பணியாற்றிய 2 Lt Dvaya அவர் எதிர்பார்த்தவிதமே மேஜர் ஜெனரல் என்ற உயர் பதவியில் பக்கத்திலேயே பணிமாற்றம் பெற்று வந்திருந்தார்.

The Commanding Officer and his Subaltern சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பெய்ததுபோல் கணேசன் எல்லோரையும் சந்தித்து மகிழ்ந்தார்.
2018 ம் ஆண்டு முதல் நாள் மேஜர் ஜெனரல் அவர்கள் தனது அதிகார இல்லத்தில் கணேசனுக்கும் அவரது துணைவியாருக்கும் விருந்து கொடுத்து மகிழ்ந்தார். கணேசன் மகனும் அவரது படைப்பிரிவின் இன்றைய தலைவரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்கள் .

First and second Generations

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968