ரானுவ அனுபவங்கள்
குறிச்சொற்கள்:  
வகை:   கட்டுரைகள்
எழுத்தாளர்:   கர்னல்.பா. கணேசன், VSM
பதிப்பகம்:  தாரிணி பதிப்பகம்
Dharini Padhippagam,Year:  
விலை:   Rs.350/-
இந்த இரண்டாம் பகுதி “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற பெயருடன் அவரது அடுத்த கால வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தில் பல மாற்றங்கள் நடந்து விட்டிருந்தன. ஒரே ஒரு தம்பியைத் தவிர மற்ற எல்லோருக்கும் திருமணமாகி இருந்தது. ஆகையினால், இந்த இரண்டாம் பகுதி “கடிதம்” போன்ற வடிவில் இல்லாமல் திரு.கணேசனது எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைத் தொகுப்பாக இருக்கும். அனுபவ முதிர்ச்சியும் காலத்தின் மாற்றங்களும் ஏற்படுத்தி இருக்கும் வித்தியாசமான மனநிலை கொண்டவராக இப்பகுதியில் அறிமுகமாகிறார் கர்னல் பாவாடை கணேசன்.
இன்றைய இளைஞர்கள் தங்களது மனவலிமையை உணராமல் இல்லாமை, இயலாமை என்று தங்களுக்குள்ளேயே ஒரு இழிநிலையை ஏற்படுத்திக் கொண்டு தவிக்கிறார்கள். “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற தலைப்பிலான இந்த அனுபவக் கட்டுரைகள் திசைமாறி போகும் இளைஞர்களை சரியான பாதைக்குத் திருப்ப உதவும். வாழ்வின் முன்னேற்ற இலக்குகளை எளிதாக அடையாளம் காணவும் அவைகளை அடையவும் உதவும். குறிப்பாக இராணுவத்தினர்க்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் நலமுடன் நீடூழி வாழ்ந்து நாட்டிற்கும் அவர் பணியாற்றிய இராணுவத்திற்கும் மேலும் சிறப்பான தொண்டு புரிய இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
நூலில் சில வரிகள்
அவர் ஒரு இராணுவ அதிகாரி! ஆரம்ப காலத்தில் ‘"ஓஃப்ஃபிகெர்ஸ் அரெ பொர்ன் வித் ஸில்வெர் ஸ்பூன்''” என்ற பெருமையான உதாரணத்திற்கு விளக்கமான பயிற்சியும் வாழ்க்கை முறையும் கொண்டிருப்பதைக் கண்டவர். கணேசன் தனது உற்றார் பெற்றோர் அந்த இராணுவ அதிகாரியின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று மனம் கலங்கினார். ரயில் வண்டி ஓடிக் கொண்டிருக்க மிகவும் புண்பட்ட இதயத்துடன் தான் விளையாடித் திரிந்த வயல் வெளிகள் பின்னோக்கி ஓடுவது கண்டு மிகவும் கண் கலங்கினார். சிறு வயதில் ஒருமுறை அவரது தம்பிக்கு காலில் முள் தைத்து புரையோடி விட்டது. கிராமப்புற மருத்துவன் வந்து வைத்தியம் பார்த்தான். கால் பாதத்தில் மெல்லிய கம்பியை விட்டு மேல்புறமாக இழுத்தான். தம்பி வலியால் துடித்த பொழுது கணேசனை தம்பி மேல் உட்கார்ந்து அவர் அசையாமல் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார். இரத்தமும் கீழுமாக வெளியேற தம்பி மிகவும் துடித்தார். பின்னர் பச்சிலை வைத்துக் கட்டினார்கள். 15-20 நாட்களில் குணமாகி விட்டது.
இன்று கணேசனின் மனதிலிருந்தும் அப்படித்தான் இரத்தமும் சீழும் வெளியேறுகிறது. “காலம் என்ற வைத்தியன் கட்டும் பச்சிலையினால் அந்தப்புண் குணமாக வேண்டும். இந்த ஊரும் மனிதர்களும் மீண்டும் ஒருமுறை அவர் இங்கு வரநேர்ந்தால் ஒரு சமயம் அவரை வரவேற்கலாம். மனதில் அலை அலையாக எழும் உணர்வுகளை வெளியில் யாருக்கும் சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த துக்கமும் துயரமும் தனது மனதில் தவறான அணுகுமுறையால் உருவானவை என்பதை கணேசன் ஆணித்தரமாக உணர்ந்தார். இழப்பதற்கு ஏதுமில்லாதவன் பெறுவதற்கும் தகுதி இல்லாதவனே என்று தானே உருவாக்கிய வாசகத்தை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்தார். இல்லை! இழப்பதற்கு இன்னும் ஏராளமானவை அவரிடம் இருக்கிறது. 30 வயதே ஆன அவரின் எஞ்சிய வாழ்க்கை இமயம் போல் எழுந்து நிற்கும். அவர் ஏன் அதை இழக்க வழிதேட வேண்டும்? உடலாலும் மனதாலும் உறுதியானவராக அவர் ஆகவேண்டுமானால் தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் கொள்ள வேண்டும்......